×
 

வந்தாச்சு பிக்பாஸ் சீசன் 9..! அதிரடி போட்டியாளர்கள், அமர்க்களமான புதிய தொகுப்பாளர்..!

பிக்பாஸ் சீசன் 9ல் களமிறங்கும் புதிய தொகுப்பாளர்.

உலகில் அனைத்து இல்லங்கள் முதல் இறுதியாத்திரை வரை, என்ன...என்ன...பிரச்சனைகள் நடக்கிறதோ..அதேபோல் காதல் முதல் பிரிவு வரை என அனைத்தையும் ஒரே நிகழ்ச்சியின் மூலமாக 100 நாட்கள் காண்பித்து, பலரது வாழ்க்கையை நல்லபடியாகவும் சிலரது வாழ்க்கையை கேள்விக்குறியாகவும் மாற்றி பல யுடியூபர்களை வாழவைக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். 

இந்த நிகழ்ச்சி, தமிழில் மட்டும் அல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி முதலான மொழிகளில் பல சீசன்களாக வெளிவந்து மக்களை என்டர்டைன்மெண்ட் செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழில் பார்த்தால் இதுவரை எட்டு சீசன்கள் முடிந்து உள்ளன. அதில் பிக்பாஸ் முதல் சீசனில் 'ஆரவ்'ம், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனாவும், ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகனும், ஆறாவது சீசனில் முகமது அஷீனும், ஏழாவது சீசனில் அர்ச்சனா ரவிசந்திரனும், எட்டாவது சீசனில் முத்துக்குமரன் முதலானோர் வெற்றி பெற்று உள்ளனர். 

இதையும் படிங்க: ரகசியமாக சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவர்கொண்டா.. புகைப்பட கலைஞர்களிடம் சிக்கி அம்பலம்..! 

இப்படி பல போட்டியாளர்கள் வந்தாலும் அவர்களை போல தொகுப்பாளர்களும் மாறி வருகின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஏழு சீசன் வரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென இனி தான் பிக்பாஸில் தொடரப்போவதில்லை என்றார். அவரை தொடர்ந்து எட்டாவது சீசனில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இறங்கி ஒவ்வொரு வாரமும் சிக்ஸர் அடித்தார். அந்தளவிற்கு அவரது கௌண்டர் இருந்தது. 

இப்படி தமிழ் பிக்பாஸிலே இவ்வளவு மாற்றங்கள் இருக்கும் பொழுது தெலுங்கிலும் மாற்றம் கொண்டுவராமல் இருந்தால் எப்படி. இதுவரை தெலுங்கு முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார், அதன்பின் நானி தொகுத்து வழங்கினார். அவரும் ஒரே சீசனோடு வெளியேற அவரை தொடர்ந்து, 5 சீசன்கள் அக்கினேனி நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில், பிக்பாஸ் 9வது சீசன் நிகழ்ச்சியில் டாப் இளம் நாயகனான விஜய் தேவரகொண்டா தொகுத்து வழங்கப்போவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் செய்திகள் வந்தது. 

இப்படி இருக்க, தற்பொழுது புதியதாக வாழ்க்கையிலும் சினிமாவிலும் அனுபவம் வாய்ந்த நந்தமுரி பாலகிருஷ்ணாவை தொகுப்பாளராக வைத்தால் நிகழ்ச்சியும் நன்றாக சூடுபிடிக்கும் போட்டியாளர்களுக்கும் நல்ல புத்திமதி கிடைக்கும் என சினிமா வட்டாரங்ககளில் பரவலாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதனை குறித்த எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாமல் சஸ்பென்சாக வைத்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.  

இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share