நதியா பதிவிட்ட இன்ஸ்ட்டா பதிவில் ரவிமோகன்...! ஒரே பதிவில் ரசிகர்களை கவர்ந்து அசத்தல்...!
நடிகை நதியா, ரவிமோகன் மற்றும் இயக்குனருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
காலத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியில் மூழ்கி ஓடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு பழையவைகளை குறித்து யோசிக்க துளிகூட நேரமில்லை. இப்படி இருக்க, புதியதாக வந்துள்ள ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழைய படங்களை புதிய படங்களாக மாற்றி திரைத்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். இப்படங்கள் வெளியான சமயத்தில் பிறக்காத குழந்தைகளும் அதனை அப்பொழுதே பார்த்த பெரியவர்களும் இப்படங்களை தியேட்டரில் காணும் வாய்ப்பை விட கூடாது என முடிவு செய்து ரீரிலீஸ் செய்யப்படும் பழைய படங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
அதன்படி, 'பாபா' படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. அதில் தியேட்டரில் கவுண்டமணி "டேய் பாபா வந்துருக்காரு லைட்ட போடுடா" என்று சொல்லும் பொழுது உண்மையிலேயே தியேட்டர் ஆபரேட்டர் லைட்டை ஆன் செய்து ஆஃப் செய்து இருப்பார். இந்த காட்சிகளும் இணையத்தில் ட்ரெண்டாகி பலரும் இப்படத்தை பார்க்க சென்றனர்.
இதையும் படிங்க: இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. கதையின் நாயகனாக யோகி பாபு!
இதனை தொடர்ந்து, ரஜினியின் பாட்ஷா படமும் ரீரிலீஸ் ஆகி இருக்கிறது. மேலும் அப்பொழுதே நூறு நாட்களைக் கடந்து வசூலில் சாதனை படைத்த ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி "21 ஆண்டுகள்" நிறைவடைந்து உள்ளது. இயக்குநர் சேரனின் திரையுலக பயணத்தில் ஹிட் கொடுத்த இந்த படம் மீண்டும் AI தொழில்நுட்பத்தில் கண்களுக்கு விருந்தாக, புதிய பரிமானத்தில் ரீரிலிஸ் செய்யப்பட உள்ளது.
மேலும் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' 15 வருடமங்களுக்கு பின் மீண்டும் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அமெரிக்காவிலும் மார்ச் 14ம் தேதி வெளியாகி அசத்தியது. அதே தேதியில், நடிகர் ரவிமோகனின் நடிப்பில் வெளியாகியிருந்த எம்.குமரன் சன்ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படம் தமிழகத்தில் 20 திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகி வெற்றி நடைபோட்டு வருகிறது.
இதுவரை நடிகர் விஜய்யின் நடிப்பில் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் இருவருக்கும் வில்லனாக பிரகாஷ்ராஜும் நடித்து "செல்லம் ஐ லவ் யூ" என்ற ஒற்றை வார்த்தையில் மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படமான 'கில்லி' ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது. இதனைப்பார்த்த மற்ற தயாரிப்பாளர்கள் இதே பேட்டனை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
தற்பொழுது, கடந்த 2002 ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ரீமா சென், வடிவேலு, ஜெய், பொன்னம்பலம், இளவரசு ஆகியோருடன் விஜய் நடித்த திரைபைடம் தான் "பகவதி". அப்பொழுதே ரூ.4 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், டீ கடை நடத்தி வருவார். பிறகு தனது தம்பி மரணத்திற்கு பழிவாங்க ஒரே சபதத்தில் கேங்ஸ்டராக மாறி பணக்காரனாக அவதாரம் எடுத்து பல கார்களில் வந்து வில்லனுக்கு இம்சை கொடுப்பார்.
இதில் என்னதான் நடிகர் விஜய் பகவாதியாக இருந்தாலும், குட்டி பகவாதியாக என்றும் அனைவரது மனதில் இடம் பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு தான். இப்படி நகைச்சுவைக்கும், ரொமன்ஸ்க்கும், ஆக்ஷனுக்கும் பஞ்சமே இல்லாத பகவதி திரைப்படம் இன்று அனைத்து திரையங்குகளிலும் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து படங்களும் ரீரிலீஸ் ஆகும் வரிசையில், 20 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரவிமோகனின் நடிப்பில் வெளியாகியிருந்த "எம்.குமரன் சன்ஆஃப் மகாலட்சுமி" என்ற திரைப்படம் மார்ச் மாதம் 14ஆம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியாகி தற்பொழுது வெற்றிநடை போட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நடிகை நதியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் ரவிமோகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில்,"எனது திரைப் பயணத்திலேயே மைல் கல்லாக விளங்கும் படம் ரீ-ரிலீஸாகியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என தெரிவித்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது பதிவுக்கு பதிலளித்து வருவதுடன் படத்தையும் காண விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது "எம்.குமரன் s/o மகாலட்சுமி".. குஷியில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...!