×
 

ஒரு மனசாட்சி வேண்டாமா..! நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் பல படங்கள்..! 

இந்த ஒரே ஆண்டில் மட்டும் நயன்தாரா கையில் பல படங்கள் உள்ளன. 

பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல சிக்கல்களை தன் வாழ்க்கையில் சுமந்து வந்தாலும் தனது கெரியர் என்று வரும்பொழுது அதனை விட்டு கொடுப்பவராக இல்லை. விக்னேஷிவனை திருமணம் செய்த பிறகு உடனே இரண்டு பிள்ளைகளுக்கு நயன்தாரா தாயக மாறிய செய்தியை கேட்டு மக்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். பின்னர் வாடகை தாயின் உதவியுடன் குழந்தை பெற்றதற்கான  ஆவணங்களை அரசாங்கத்தின் முன் சமர்பித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பின்பு இவர்கள் இருவரின் திருமண ஆவணப்படம் வெளியானதில் புதிய சிக்கலை கொண்டுவந்தார் நடிகர் தனுஷ், தனது புரொடக்ஷனில் வெளியான படத்தின் பாடல் மற்றும் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி ரூ.10 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். தற்பொழுது இந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், நயன்தாரா தன்னை யாரும் "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என கூறி பலரது வசைபாடுதலுக்கு ஆளானார். 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு எதிராக வன்மத்தை கக்கிய எஸ்.வி.சேகர்.. உன் படம் ஓடாது என சாபம் விட்டு பதிவு..!

இப்படி இருக்க தற்பொழுது YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் "டெஸ்ட்".  கதாபாத்திரத்தில் நடித்திருகிறார் நடிகை நயன்தாரா. இந்த நிலையில், டெஸ்ட் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. 

அந்த வரிசையில் முதலாவது திரைப்படம் "மண்ணாங்கட்டி Since 1960" இயக்குனர் டியூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் தான் "மண்ணாங்கட்டி Since 1960". இப்படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், நரேந்திர பிரசாத் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

இரண்டாவது திரைப்படம் "டியர் ஸ்டூடண்ட்ஸ்". சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிர் ரே இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஆசிரியராக நடித்து உள்ளார், நயன்தாராவுடன் தீப்தி, சுபத்ரா ராபர்ட் மற்றும் கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மூன்றாவது திரைப்படமாக "டாக்சிக்". கே.வி.என் நிறுவனம் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் கன்னட திரைப்படமான டாக்சிக்" திரைப்படத்தில் யாஷ்-க்கு ஜோடியாக நடித்து உள்ளார் நடிகை நயன்தாரா. இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

நான்காவது படமாகா "ராக்காயி". ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிபில்,  அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘ராக்காயி’.  இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாவது படமாக நம் அனைவருக்கும் தெரிந்த "மூக்குத்தி அம்மன் 2" இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். மேலும் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி வரை உள்ளதால் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை அடுத்து, துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 81வது படத்தில் நடிக்க உள்ளார். அதன் பின் மம்முட்டி படம், தனி ஒருவன் 2, கவின் படம் என வரிசையாக நயன்தாரா நடிப்பில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் படி பார்த்தால் இப்பொழுதே நடிகை நயன்தாரா தன் கைவசம் எட்டு படங்கள் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்த நயன்தாரா.. மகனின் முகத்தை மறைத்து அட்டகாசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share