×
 

கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்த நயன்தாரா.. மகனின் முகத்தை மறைத்து அட்டகாசம்..!

கேமராவை பார்த்ததும் தனது மகனின் முகத்தை மறைத்து ஓட்டம் பிடித்தார் நடிகை நயன்தாரா.

YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், சித்தார்த், ஆகியோருடன் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த "டெஸ்ட்" திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. மேலும், நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான, ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வரும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. 

இந்த சூழலில் படத்தில் ஒருபக்கம் பிசியாக சுற்றி வரும் நடிகை நயன்தாரா, தன் வாழ்க்கையிலும் பல சிக்கல்களில் சிக்கி அதன்பின்னும் பிசியாக சுற்றி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷிவனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இவர்கள் இருவரும் நார்மல் பீப்பள் அல்ல. என கூறியது நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை வரவழைத்தது. பின் நயன்தாரா விக்னேஷிவனை சூப்பர்மேனாக சித்தரித்து இணையத்தில் பறக்க விட்டனர் நெட்டிசன்கள். 

இதையும் படிங்க: 'முத்துகுளிக்க வாரீங்களா'...! தனது கணவரை மயக்க வித்தியாசமான ஆடையில் ரகுல் ப்ரீத் சிங்...! 

இதனை அடுத்து நடிகை அனுஷ்கா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நிலையில் அவருக்கு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் "லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்" கொடுப்பதாக தகவல் கிடைக்க, அவர்களை தொடர்பு கொண்ட நயன்தாரா அனுஷ்காவிற்கு "லேடி சூப்பர் ஸ்டார்" பட்டம் கொடுக்க கூடாது என வலியுறுத்தி உள்ளார். ஆனால் அப்படகுழுவினர் அப்படி செய்ய முடியாது என மறுக்க, வேறு வழியின்றி தன்னை இனி யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார் நயன்தாரா. இதனால் பல பேருடைய வசைபாடலுக்கு ஆளானார். 

இப்படி இரண்டு சிக்கல்களை தன்மீது வைத்திற்குக்கும் நயன்தாராவுக்கு பெரிய தலைவலியாக இன்றும் இருப்பது நடிகர் தனுஷ் போட்ட ஒரே வழக்கு தான். விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்தை, நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனம் "பியாண்ட் தி ஃபேரி டேல்"(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது, அதில் "நானும் ரவுடி தான்" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், திடீரென ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸை நயன்தாராவிற்கு அனுப்பியுள்ளார். 

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு உள்ளது. இப்படி இருக்க, எப்படிப்பட்ட  சூழ்நிலைகள் வந்தாலும் அதனை எதிர்த்து போராடும் தைரியம் எனக்கு உண்டு என தைரியமாக நிற்கும் நயன்தாரா, இந்த பிரச்சனைகளை விட தனது குழந்தைகளின் நலன் தான் முக்கியம் என அவர்களுடன் தனது நேரத்தை அதிகமாக செலவழித்து வருகிறார். தனது குழந்தைகளுக்கு அன்பான தாயாக இருக்கும் நயன்தாரா, எங்கு சென்றாலும் அவர்களை பாதுகாப்பத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்.

குழந்தை வளர்ப்பில் ஸ்டிரிக்ட்டாக இருக்கும் நயன்தாரா தனது இரண்டு மகன்கள் உடன் தற்பொழுது ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது ஏர்போர்ட்டில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் கேமராவை கொண்டு வருவதை பார்த்த நயன்தாரா, தனது மகனின் கண்களில் கேமரா flash படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மகனின் முகத்தை இறுக்கமாக மூடிக்கொண்டார். பின் வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மாலை பொழுதின் மயக்கத்தில் அதுல்யா ரவி.. இளசுகளை இழுக்கும் அழகிய புகைப்படம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share