நான் அறிவாளின்னு நினைச்சவங்களில் பாதி பேர் முட்டாள் தான்.. திவ்யதர்ஷினி ஆவேச பேச்சு..!
உங்கள் வாழகியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல நினைத்தால் யாருடைய அட்வைஸையும் கேட்காதீர்கள் என திவ்யதர்ஷினி ஆவேசமாக கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அசத்தி வருபவர் தான் திவ்யதர்ஷினி. என்னதான் இன்று தொலைக்காட்சிகளில் ரம்யா, ஜாக்லின், பிரியங்கா, மணிமேகலை என நிறைய தொகுப்பாளர்கள் வந்தாலும், மிகப்பெரிய ஜாமவான்களையும் பலதரப்பட்ட பிரபலங்களையும் வைத்து பேட்டி எடுப்பதிலும், சிவகார்த்தியனுடன் மேடை நிகழ்ச்சிகளில் ஏறினால் அங்கு கைத்தட்டல்களும் விசில்களும் வருவதற்கு காரணமாக இருப்பவர் டிடி.
இப்படி பட்ட திவ்யதர்ஷினி, இதுவரை "ஜோடி நம்பர் ஒன்னில் சீசன்கள் 1 முதல் 7 வரையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், பாய்ஸ் VS கேர்ள்ஸ், டான்சிங் சூப்பர் ஸ்டார், காபி வித் டிடி, அச்சம் தவிர், அன்புடன் டி டி. ஜோடி பன் அன்லிமிடெட், பிக் பாஸ் தமிழ் 2 கொண்டாட்டம், ஏர்டெல் சூப்பர் சிங்கர், என்கிட்ட மோதாதே.
டான்சிங் சூப்பர் ஸ்டார். ஸ்பீட் செட்டு கோ, பிக் பாஸ் தமிழ் 4 கொண்டாட்டம் மற்றும் பல பிரபலங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து பல விருதுகளை அறிவித்து அங்கேயே தனக்கான விருதுகளையும் பெற்றவர்.
இதையும் படிங்க: "என்ன மக்களே இப்படி பண்ணுறீங்க.." துஷாரா விஜயன் போட்ட ஒற்றை பதிவு..! ரசிகர்கள் ஆரவாரம்..!
இதனை தொடர்ந்து, திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறிய திவ்யதர்ஷினி சற்றும் மனம் தளராமல் படங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என ஜாலியாக இருப்பதை போல் வெளியுலகத்திற்கு காண்பித்தாலும், நீண்ட நேரம் நின்றபடி ஷோக்களை தொகுத்து வழங்கி மக்களையும்சிரிக்க வைத்து, தன் குடுப்பத்திற்காகவும் இப்படி உழைத்த டிடியால் சிறிது நேரம் கூட நிற்க முடியாத அளவிற்கு பிரசச்னை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலிலும் இன்றும் தன் கெரியரை விடாமல் பிடித்து வருகிறார்.
இப்படி இருக்க, தற்பொழுது தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த திவ்யதர்ஷினி பேசிய ஒரு விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்," நான் என் கல்லூரி படிப்பை முடித்த பின் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பலர் எனக்கு பலவிதமாக அட்வைஸ் கொடுத்தனர்.
நமது செல்ப் கான்ஃபிடன்டை உடைக்கும் வகையில் அவர்களது அட்வைஸ் இருக்கும் அதுமட்டுமல்லாமல் அவர்கள் அப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையை அவர்களிடத்தில் சென்று பார்த்தால் அதை சொல்லவே முடியாது அந்த அளவிற்கு மோசமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், ஊரில் நான்கு பேர் நாலு விதமாக பேசுவார்கள் அவர்களை எல்லாம் பார்த்தால் வாழமுடியாது என கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: மாலை பொழுதின் மயக்கத்தில் அதுல்யா ரவி.. இளசுகளை இழுக்கும் அழகிய புகைப்படம்..!