×
 

ஓடிடியில் வெளியான 5 படங்கள்..! ஒரே நாளில் இத்தனை படங்களா..! ரசிகர்கள் ஆரவாரம்..!

ஓடிடியில் வெளியான ஐந்து திரைப்படங்களையும் பார்த்தே ஆக வேண்டும் என சினிமா ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் திரையில் தோன்றிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கம். அந்தவகையில் இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த ஐந்து திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சினிமா ரசிகர்கள் இரண்டு நாள் விடுமுறையை ஓடிடி தளங்களில் செலவழிக்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் முதலில் திரையரங்குக்கே செல்லாமல் அதிரடியாக ஓடிடியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் "டெஸ்ட்".

YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் என படக்குழுவினரால் கூறப்பட்டு இருந்தது.  மேலும் இப்படம் ஜெய் பீம் படத்தைப் போன்று netflix-ல் ஏப்ரல் 4-காம் தேதி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது இந்த படம் netflix-ல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: எந்தெந்த ஓடிடியில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் தெரியுமா..?

ஏற்கனவே இப்படத்தை பற்றி நடிகர் சித்தார்த் கூறுகையில், "நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பேன், பின்பு எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன். ஆக, படத்தில் கிரிக்கெட் வீரராக டூப் வைத்து நடித்து ஒப்பேத்த முடியாது. அதேபோல் தான், 'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான்" என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இரண்டாவதாக வெளியான திரைப்படம் "கர்மா", 4 வித்தியாசமான கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கொரியன் திரைப்படமான கர்மா. வெவ்வேறு பிரச்சனைகளால் மாறுபட்ட  மனநிலையில் உள்ள மனிதர்கள் ஒரே சூழ்நிலை காரணமாக ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை காண்பிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இப்படம் ஏப்ரல் 4ம் தேதியான இன்று ஓடிடி தளமான "நெட்பிளிக்ஸில்" வெளியாகி உள்ளது.


மூன்றாவதாக வெளியான திரைப்படம் "லெக் பீஸ்" , தமிழகத்தின் நகைச்சுவை நடிகரான ஸ்ரீனாத் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான "லெக் பீஸ்" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.

இன்ஸ்டன்ட் பணக்காரனாக மாறும் இவர்களின் வாழ்க்கையில் எதிர்நோக்கி காத்திருக்கும் சவால்களை எதிர்க்கும், அற்புதமான படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் போன்றோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த 'லெக் பீஸ்' திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதியான இன்று ஓடிடி தளமான "டென்ட் கொட்டா" தளத்தில் வெளியாகியுள்ளது. 


நான்காவதாக வெளியான திரையப்படம் "மர்முர்", ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழில் உருவாகியுள்ள முதல் "ஃபவுண்டு ஃபூட்டேஜ் ஹாரர்" திரைப்படம் என கூறப்படுகிறது. "ஃபவுண்டு ஃபூட்டேஜ் ஹாரர்" திரைப்படம் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர் மற்றும் சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் காட்சிகள் பதிவு செய்திருப்பதை போலவே இருக்கும். 

இதன் மூலம் படம் பார்க்கிறவர்களுக்கு உண்மையாகவே திகிலை ஏற்படுத்தும் உணர்வை இத்திரைப்படம் கொடுக்கும் என படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இத்திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது இத்திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதியான இன்று ஓடிடி தளமான "டென்ட் கொட்டா"  தளத்தில் வெளியாகியுள்ளது. 


ஐந்தாவதாக வெளியான திரைப்படம் "ராஜாகிளி", வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள "ராஜாகிளி" படத்தில் சமூத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்து உள்ளனர். இப்படத்தில் கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், பழ.கருப்பையா, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி. இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், தீபா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ராஜாகிளி திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதியான இன்று ஓடிடி தளமான "அமேசான் பிரைம்" தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஐந்து திரைப்படங்களையும் இரண்டு நாட்கள் விடுமுறையில் பார்த்தே ஆகவேண்டும் என சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம்.. கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கிய ஜியோ..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share