தனது மனைவியின் பிறந்த நாளுக்கு வெற்றிமாறன் கொடுத்த பரிசு..! ஷாக்கான அவரது மனைவி ஆர்த்தி...!
வெற்றிமாறன் தனது மனைவியின் பிறந்தநாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
பார்க்க தாடியும் கசங்கிய துணியுடனும் எங்கு பார்த்தாலும் புன்னகையை காண்பித்து அமைதியாக இருக்கும் இயக்குனர். இவரது ஆரம்ப வாழ்க்கை மிகவும் கடுமையானது தான். இன்றும் தனது உழைப்பால் உயர்ந்து நிற்கும் தனித்திறமையுள்ள இயக்குனர். எப்படி இன்று நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ என இயக்குனர்கள் இருக்கிறார்களோ அவர்களை போல இவரும் ப.ரஞ்சித், சசிகுமார், சமுத்திரகணி போன்ற இயக்குனர்களுடன் இருப்பார். இவரது கடுமையான சினிமா பயணத்தின் பொழுது இவர் மீது அதிக நம்பிக்கை வைத்தது இவர் மனைவிதான் அவர் வேலைக்கு சென்று இவரை வெற்றியாளனாக மாற்றினார். அப்படி பட்டவர் தான் வெற்றிக்கே சொந்தமான இயக்குனர் வெற்றிமாறன்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை என்கின்ற பகுதில் இருந்து தனது சினிமா கனவை நினைவாக்க சென்னையில் அடியெடுத்து வைத்த வெற்றி மாறன், 1999ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் இயக்குனர் பாலு மஹேந்திரன் இயக்கத்தில் உருவாகி 52 பாகங்களாக ஒளிபரப்பப்பட்ட "காதல் நேரம்" என்ற நிகழ்ச்சியில் அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இதையும் படிங்க: ஒரே படம்.. நடுத்தெருவுல நானும் எனது கணவரும்.. ரொம்ப அசிங்கமா போச்சி.. நீலிமா ராணி பகீர்...!
பின்பு, இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராகவும், அவரை தொடர்ந்து இயக்குநர் மஹேந்திராவின் 'ஜூலி கணபதி' மற்றும் 'அது ஒரு கனா காலம்' படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாபுரிந்தார். இதனை அடுத்து இயக்குநராக கலம் இறங்க நினைத்த வெற்றிமாறன் 2007ம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து "பொல்லாதவன்" திரைப்படத்தினை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாமல் இன்று பல்சர் பைக் அதிக இளைஞர்கள் கைகளில் இருக்க காரணம் வெற்றிமாறன் தான்.
அதனை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் தனுஷை வைத்து "ஆடுகளம்" என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படம் தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளை வெற்றிமாறனுக்கு பெற்றுத் தந்தது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது.
இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன், அடுத்ததாக விசாரணை, வட சென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியும், தேசிய நெடுச்சாலை 4, நான் ராஜாவாக போகிறேன், பொறியாளன் போன்ற படங்களை தயாரித்தும் தமிழ் திரையுலகில் இன்று முக்கிய இயக்குனராக இடம் பிடித்து இருக்கிறார். மேலும் இவர் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் உலகளவில் பிரபலமாகி ஆஸ்கர் விருதிற்கு நேர்முறையாக பரிந்துரைக்கப்பட்டது.
இந்த சூழலில், சமீபத்தில் பிரபல விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறனிடம் 'வட சென்னை 2' எப்பொழுது வரும்..? என ரசிகர்கள் கேட்டதற்கு கண்டிப்பாக இப்படம் வரும் என கூறி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தார். இப்படியிருக்க, தனது உயர்ந்த நிலைக்கு காரணமான தனது மனைவியை என்றும் விட்டுக்கொடுக்காத வெற்றிமாறன் இன்று தனது மனைவியை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்.
கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் வழியில் செலவுக்கு பயந்த காலங்கள் எல்லாம் மாறி நன்றாக இருக்கும் சூழலில் தனது மனைவி ஆர்த்தியின் 50வது பிறந்தநாளை சினிமா பிரபலங்களுடன் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
இதையும் படிங்க: கூலி படப்பிடிப்பு நிறைவு... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!