நடிகர் பிரசாந்த் என்னை சும்மா விட்டதே இல்லை...! நானே விலகி சென்றாலும் தேடி வருவார் - நடிகை கிரண் பேச்சு..!
நடிகர் பிரசாந்த் குறித்த உண்மையை பகிரங்கமாக உடைத்த நடிகை கிரண்.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் 1990ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த், அதனை தொடர்ந்து செம்பருத்தி, திருடா திருடா, கல்லூரி வாசல், ஜீன்ஸ், ஜோடி, அப்பு, பிரியாத வரம் வேண்டும், ஃபைவ் ஸ்டார், வின்னர், ஷாக், லண்டன், மம்பட்டியான், சாகசம், ஜானி, வினய விதேய ராமா, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), அந்தகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார் நடிகர் பிரசாந்த்.
இத்தனை படங்களில் நடித்தவர் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் நடித்த படம் தான் நடிகர் விஜயின் கோட். இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்த இப்பொழுதுள்ள 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஆதலால் அவரை இன்னும் பல படங்களில் நடிக்க அழைக்க, தற்பொழுது ஒரு படத்தில் மட்டும் கமிட் ஆகி, அப்பட புஜையில் சிறப்பாக பேசியும் இருந்தார்.
இந்த சூழலில், இயக்குனர் "ஹரி" இயக்கத்தில் 2002ம் ஆண்டு 'தமிழ்' எனும் படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார் பிரசாந்த். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் அவருக்கு ஜோடி சிம்ரன் தான். இப்படிப்பட்ட படம் மீண்டும் வராதா என ஏங்கி இருப்பவர்கள் இங்கு பலர் உண்டு. இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாக இருந்த நிலையில், அதற்குண்டான அதிகாரப்பூர்வ தகவல் அவரது பிறந்த நாள் அன்று சென்னையில் நடிப்பெற்ற நிகழ்ச்சி மூலமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்னேகா, பிரசன்னா...! மக்களுடன் பேசி மகிழ்ந்து வழிபாடு..!
அதில் பேசிய நடிகர் பிரசாந்த், 'என்னுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய அப்பா 'பிரசாந்த் 55' என்ற படத்தை பரிசாக கொடுத்திருக்கிறார். அத்துடன் ஒரு மிகப்பெரிய இயக்குர் ஹரியுடன் இணையும் வாய்ப்பை எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார். கவலை வேண்டாம், இது மிகப்பெரிய ஹிட் படமாக வரும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடித்தமான திரைப்படமாக வரவிருக்கிறது. படத்தில் பாடல்கள், சென்டிமென்ட் உள்ளிட்ட எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும். இந்த படத்தை தயாரிப்பது என்னுடைய அப்பா தியாகராஜன் சார் தான்.
அவர் எதையும் சாதாரணமாக செய்ய மாட்டார் பிரமாண்டமாகத்தான் செய்வார். ஊடகத்திலிருந்தும், என் உயிருக்கும் மேலான ரசிகர்களிடமிருந்தும் எனக்கு அளவற்ற அன்பு எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய ரசிகர்கள் இப்போது வரை என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக என்னுடைய படங்களின் மூலமாக அவர்களுக்கு நான் நன்றி சொல்வேன். அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கிறதோ அதையெல்லாம் செய்ய நான் முயற்சிப்பேன்.' என்று பேசினார்.
இந்நிலையில், நடிகர் பிரஷாந்த் குறித்து 'நடிகை கிரண்' பேசிய பேட்டியானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்," நடிகர் பிரசாந்த் மிகச்சிறந்த மனிதர். ஒருமுறை அவரது நட்பு வட்டத்துக்குள் நாம் சென்றுவிட்டால் நம்மை அக்கறையோடு கவனித்துக்கொள்வார். அதுமட்டுமில்லாமல் நாமே அவரிடம் பேசாவிட்டாலும் அவரே நம்மை அழைத்து நலம் விசாரிப்பார். நான் பார்த்ததிலேயே தமிழ் சினிமாவில் மிக மிக நல்ல மனிதர் என்றால் அது நடிகர் பிரசாந்த் தான்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நாங்கள் பார்த்ததிலும் மிகவும் அழகான பொறுப்புடன் இருக்க கூடிய நடிகர் இவரே என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என் ஹார்ட் ட்ரைவ்-ஐ திருப்பிக் கொடுங்கள்.. பெப்ஸி அலுவலகத்தில் நடிகை சோனா திடீர் உண்ணாவிரதம்..!