பிரபல நடிகர் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே..! ஐஸ்வர்யா ராய் ஜோடியை தன்வசமாக்கிய அழகி..!
பிரபல நடிகர் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகில் ரம்பாவுக்கு பிறகு தொடையழகியாக வளம் வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. "முட்ட பொம்மா... முட்ட பொம்மா..." என்ற பாடலை கேட்டால் இவரது கிரைண்டர் நடனம் இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், சினிமா வட்டாரத்தில் இவருக்கு ஏத்த ஜோடி என்றால் ஒன்று அல்லு அர்ஜுன் மற்றொருவர் நடிகர் விஜய். அந்த அளவிற்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்து நிற்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
"அழகா இருக்கும் பெண்கள் அறிவா இருக்க மாட்டாங்க" என பாடல் வரிகள் இருப்பது போல, அழகாக இருக்கும் கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்த பூஜா ஹெக்டே, துளுவைத் தவிர, ஆங்கிலம், இந்தி , மராத்தி, தமிழ் மற்றும் கன்னடம் ஆகியவற்றில் சரளமாகப் பேசக்கூடியவர்.அந்த அளவிற்கு அழகும் அறிவையும் சரிசமமாக உடையவர். மேலும், இவரது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொழுது பரதநாட்டியம் மற்றும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
ஆதலால் பூஜா ஹெக்டே நடனத்திற்கு அன்றே நிறைய ரசிகர்கள் இருந்தனர். அதனை மாற்ற நினைத்த பூஜா ஹெக்டே, 2009ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா 2009 போட்டியில் பங்கேற்றார், ஆனால் இந்த போட்டியில் அவர் விருதுகளை பெற்றாலும், ஆரம்ப சுற்றில் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து 2010ம் ஆண்டு கலந்து கொண்ட, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம்..! இனி தான் ஆட்டம் சூடுபிடிக்க போகிறது..!
இவரது அழகையும் அறிவையும் பார்த்த இயக்குனர் மிஷ்கின், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி திரைப்படத்தில் பூஜாவை அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து, நாக சைதன்யாவின் காதல் நகைச்சுவை திரைப்படமான "ஓகா லைலா கோசம்" படத்தில் ஹெக்டே நடித்தார்.
முகமூடி, ஒக லைலா கோசம், முகுந்தா, மொஹன்ஜ தாரோ, துவடே ஜகநாதம், ரங்கஸ்தளம், சாக்க்ஷியம், அரவிந்தா சமெதா வீர ராகவா, மஹர்ஷி, கடலகொண்ட கணேஷ், ஹவுஸ் ஃபுல் 4, ஆல வைகுண்டபுரம்லூ, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், ராதே ஷ்யாம், ஆச்சார்யா, சர்க்கஸ், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.
இவரை போலவே, வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் 1990ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பிரசாந்த், அதனை தொடர்ந்து செம்பருத்தி, திருடா திருடா, கல்லூரி வாசல், ஜீன்ஸ், ஜோடி, அப்பு, பிரியாத வரம் வேண்டும், ஃபைவ் ஸ்டார், வின்னர், ஷாக், லண்டன், மம்பட்டியான், சாகசம், ஜானி, வினய விதேய ராமா, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), அந்தகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார் நடிகர் பிரசாந்த்.
இந்த சூழலில், இயக்குனர் "ஹரி" இயக்கத்தில் 2002ம் ஆண்டு 'தமிழ்' எனும் படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார் பிரசாந்த். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் அவருக்கு ஜோடி சிம்ரன் தான். இப்படிப்பட்ட படம் மீண்டும் வராதா என ஏங்கி இருப்பவர்கள் இங்கு பலர் உண்டு. இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாக இருந்த நிலையில், அதற்குண்டான அதிகாரப்பூர்வ தகவல் அவரது பிறந்த நாள் அன்று சென்னையில் நடிப்பெற்ற நிகழ்ச்சி மூலமாக அறிவிக்கப்பட்டது.
அதில் பேசிய நடிகர் பிரசாந்த், 'என்னுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய அப்பா 'பிரசாந்த் 55' என்ற படத்தை பரிசாக கொடுத்திருக்கிறார். அத்துடன் ஒரு மிகப்பெரிய இயக்குர் ஹரியுடன் இணையும் வாய்ப்பை எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார். கவலை வேண்டாம், இது மிகப்பெரிய ஹிட் படமாக வரும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடித்தமான திரைப்படமாக வரவிருக்கிறது. படத்தில் பாடல்கள், சென்டிமென்ட் உள்ளிட்ட எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும். இந்த படத்தை தயாரிப்பது என்னுடைய அப்பா தியாகராஜன் சார் தான்.
அவர் எதையும் சாதாரணமாக செய்ய மாட்டார் பிரமாண்டமாகத்தான் செய்வார். ஊடகத்திலிருந்தும், என் உயிருக்கும் மேலான ரசிகர்களிடமிருந்தும் எனக்கு அளவற்ற அன்பு எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய ரசிகர்கள் இப்போது வரை என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக என்னுடைய படங்களின் மூலமாக அவர்களுக்கு நான் நன்றி சொல்வேன். அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கிறதோ அதையெல்லாம் செய்ய நான் முயற்சிப்பேன்.' என்று பேசினார்.
இந்த சூழலில், இப்படத்தில் நடிகர் பிரசாந்த்திற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிக்காவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூஜா ஹெக்டே நடனத்தை பார்க்க தயாரா..! 'ஜனநாயகன்' பட அடுத்த அப்டேட் இதோ..!