×
 

முடிவுக்கு வந்தது விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம்..! இனி தான் ஆட்டம் சூடுபிடிக்க போகிறது..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளன. 

ஜனநாயகன் திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி வந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் "ஜூன் 22ம் தேதி" தளபதி விஜயின் பிறந்த நாளான அன்று வெளிவரும் என படக்குழுவினரால் கூறப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். 

இதனை அடுத்து, ஜனநாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் சக நடிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இணைந்து இப்படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இதனை கேட்டு ரசிகர்கள் சந்தோஷமாக இருந்த வேளையில் திடீரென அவர் படம் தடையானது. அதன்படி, ஜனநாயகன் படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று இருந்தது.

இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியான சம்பளம் மற்றும் பேட்டாக்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஷூட்டிங்கை அந்நிறுவனம் நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை வருத்தமடைய செய்தது.

இதையும் படிங்க: திரையில் தான் நீங்க ஹீரோ; இதுல நீங்க ஜீரோ... விஜய்யை விளாசிய போஸ் வெங்கட்!!

இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருந்த படக்குழுவினருக்கு தைரியம் கூறிய அப்படத்தின் தயாரிப்பாளர், படத்தின் மீதமுள்ள ஷூட்டிங்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என நினைத்து, ஜனநாயகன் படம் வெளியாவதற்கு முன்பே "நெட்பிளிக்ஸ்" ஓடிடி நிறுவனத்திற்கு ரூ.121 கோடிக்கு விற்று அந்த பணத்தை வைத்து மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.

இந்த சூழலில், ஜனநாயகன் படத்தின் கதை மற்றும் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை குறித்து தகவல்கள் வெளியானது அதில், இப்படத்தில் அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து, விஜயின் "ஜனநாயகன்" படமும் சிவகார்த்திகேயனின் "பராசக்தி" படமும் பொங்கலுக்கு வெளியாகி, வசூலில் மோத காத்திருக்க, இவர்களுக்கு நடுவில் புதியதாக, கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் களமிறங்கியுள்ளது. அதன்படி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடுவோம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இப்படி மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை ஜனநாயகன் படப்பிடிப்பு எட்டியுள்ளது. அதன்படி, வருகிற மே மாதம் 15ம் தேதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறைவு பெரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாகவே விஜய்யின் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்படும் என கூறுகின்றனர் படக்குழுவினர். 

இப்படம் முடிவுக்கு பின்னர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 

இதையும் படிங்க: நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் "லுக் டெஸ்ட்" காட்சிகள் வெளியாகி உள்ளது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share