×
 

படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை..! கோடிகளில் பணம் கொடுத்து படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்..!

நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்டு வரும் படத்தை விலை கொடுத்து வாங்கியுள்ளது ஓடிடி நிறுவனம். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் இன்றளவும் ரசிகர்ளுக்கு ட்ரீட் தான். அந்த அளவிற்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாட்டவரையும் கவர்ந்திருக்கிறது ரஜினியின் ஸ்டைல் மற்றும் நடிப்பு. இப்படி இருக்க, இன்று வரை நடிகர் ரஜினியின் படங்களில் மக்கள் மனதில் ஆழமாக உள்ள படங்கள் என்றால் மன்னன், முத்து, படையப்பா, அருணாச்சலம், அண்ணாமலை, தில்லுமுல்லு, குரு சிஷியன்,பாட்ஷா போன்ற படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து இக்காலத்துக்கு ஏற்ப நடிகர் ரஜினியை வைத்து எடுத்த பேட்ட, அண்ணாத்த, தர்பார், கபாலி, காலா, வேட்டையன், ஜெயிலர் போன்ற படங்கள் இன்றும் ஃபேமஸாக இருக்கிறது.  

இத்தனை படங்களை தொடர்ந்து தற்பொழுது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. முக்கியமாக இப்படத்தில் டைட்டில் பிரச்சனை வரும் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் வரவில்லை. காரணம் என்னவெனில், ரஜினி காந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் தலைப்பு கடந்த 1995ம் ஆண்டே ஒருவர் படத்தில் வைத்து விட்டார். மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 90களின் கூலி திரைப்படம்.

இதையும் படிங்க: வெளியானது கூலி படத்தின் புகைப்படங்கள்...! லோகேஷ் கனகராஜுக்கு ஷாக் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

90களின் பட தலைப்பை வைத்து தான் தற்பொழுது வோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என கமல்ஹாசன், விஜய், மற்றும் கார்த்திக்கை வைத்து படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஏன் சூப்பர் ஸ்டாரை வைத்து மட்டும் படம் எடுக்கவில்லை? என பரவலாக பேசப்பட்டு வந்தது.

 இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரனின் மிரட்டும் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் 'கூலி.

இதனை தொடர்ந்து, கூலி படத்தினை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். லோகேஷ் கனகராஜை வாழ்த்தும் விதமாக கூலி பட தயாரிப்பின் புகைப்படங்ககளை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதனை பார்த்து ரசிகர்கள் கண்டிப்பாக லோகேஷுக்கு கலாநிதி மாறன் கையால் கார் உண்டு என கூறிவரும் வேளையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இப்படம் வெளியாவதற்கு முன்பாக பல கோடி செலவு செய்து ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. 

இந்த நிலையில், கூலி திரைப்படத்தை ரூ.120 கோடி பேரம் பேசி கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பறியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பதால் அதிகாரப்பூர்வ தகவலுக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கண்டிப்பாக லோகேஷுக்கு ட்ரீட் உண்டு என கூறி வருகின்றனர். 

இதையும் படிங்க: மீண்டும் சூப்பர் ஸ்டார், கார்த்திக் சுப்புராஜ் காம்போ..! இந்த முறை என்ன மேஜிக் பண்ண போறாரோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share