×
 

ராதிகாவின் மீது கண்களை வைத்திருக்கும் ரஜினிகாந்த்...! சுக்குநூறாய் உடைந்த ரகசியம்..!

நடிகை ராதிகாவை எந்த நிகழ்ச்சில் பார்த்தாலும் நடிகர் ரஜினிகாந்த் அவரை அங்குதான் பார்ப்பார் என்ற ரகசியம் உடைந்துள்ளது. 

1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.

அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார். 

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் இணையும் மாஸ் நடிகர்... ! நெல்சன் ட்ரீட் என ரசிகர்கள் ஆரவாரம்...!

இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு இயக்குனர்கள் இரண்டு படத்தை இயக்கி வருகின்றனர். ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியானது. அதனை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்பொழுது ஜெயிலர் 2 படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதில் தற்பொழுது ரஜினி நடித்து வருகிறார். 

நடிகர் ரஜினியை போல ஸ்டாராக வளம் வருபவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். இவரை திரையுலகில் கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரஜினியின் படங்களில் இவரது படமும் மிக சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஒரு படத்தில் நடிகை ராதிகா, இரவு 2மணியளவில் ரஜினியை குளிப்பாட்டி இட்லி ஊட்டும் காட்சிகள் கொண்ட காமெடி படங்கள் இன்றும் பலரது நினைவில் இருந்து நீங்காது. அதுமட்டுமல்லாமல், இவர் நடிகர் ரஜினிகாந்துடன் நல்லவனுக்கு நல்லவன், ஊர் காவலன், மூன்று முகம், அன்புள்ள ரஜினிகாந்த், போக்கிரி ராஜா, ரங்கா, ஜீவன போராட்டம், நன்றி மீண்டும் வருக முதலிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். 

இப்படி இருக்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதிகாவின் ரகசியங்கள் உடைந்துள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த பக்ஷனுக்கு சென்றாலும் ரப்பர் செருப்பு அணிந்து வருவாராம். அதேபோல் ஒரு ஃபங்ஷனுக்கு வந்தபோது ரப்பர் செருப்பு அணிந்து வந்து இருக்கிறார். அப்பொழுது அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை ராதிகா அவரது செருப்பை பார்த்து அவரிடம் சென்று நீங்கள் சூப்பர் ஸ்டார் தானே, பின் ஏன் இது போன்று செருப்பு அணிந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனை பர்சனலாக எடுத்துக்கொண்ட ரஜினி காந்த் அன்றிலிருந்து எந்த நிகழ்ச்சியில் ராதிகாவை பார்த்தாலும் முதலில் அவரது செருப்பை தான் பார்ப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  

இதனை பார்த்த நெட்டிசன்கள் பல கோடி சம்பாரித்தாலும் காலில் உள்ள செருப்புதான் முக்கியமாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக ராதிகாவுக்கு ஒருநாள் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்தே தீருவார். அதுவரை அவரது பார்வை ராதிகாவை தாண்டாது என பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: மீண்டும் சூப்பர் ஸ்டார், கார்த்திக் சுப்புராஜ் காம்போ..! இந்த முறை என்ன மேஜிக் பண்ண போறாரோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share