×
 

ஜெயிலர் 2 படத்தில் இணையும் மாஸ் நடிகர்... ! நெல்சன் ட்ரீட் என ரசிகர்கள் ஆரவாரம்...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தரமான நடிகரை இறக்கி உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

"சிவாஜி சிவாஜிதான் எம்ஜிஆர் எம்ஜிஆர்தான் " என படங்களில் விவேக் கூறுவதை கேட்டு இருப்போம். அதே போல் தான் இப்பொழுது 'சூப்பர் ஸ்டார்' என்றால் அப்பவும் இப்பவும் எப்பவுமே 'நடிகர் ரஜினி'தான் என மக்கள் அனைவரும் கூறி வருவதற்கு காரணம் அவரது அயராது உழைப்பு என சொல்லலாம். இதுவரை சினிமாவில் 170 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயசானாலும் அவரது ஸ்டைலும், அவரது அழகும் அவரை விட்டு நீங்காத வகையில் பாதுகாத்து வருகிறார். அது தான் அவரது வெற்றிக்கு காரணாமாகவும் இருக்கிறது. 

இப்படி 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.

இதையும் படிங்க: படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை..! கோடிகளில் பணம் கொடுத்து படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்..!

அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார். 

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படமான "ஜெயிலர்" திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் படையாப்பா படத்தில் தனக்கு வில்லியாக இருந்த ரம்யாகிருஷ்ணனை திருமணம் செய்து அவரிடத்தில் சாதுவாக நடித்து, பின் தனது 'டைகர்' முகத்தை காண்பித்து படத்தில் கலக்கி இருப்பார். இப்படத்தில் அனிரூத் தனது இசையில் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை காண்பித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான சூப்பர் ஸ்டார், நெல்சன் திலீப்குமார், மற்றும் அனிரூத் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறான் விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்திருந்தார்.

இப்படியிருக்க, ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் 'கூலி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் உருவாக்க புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அமேசான் பிரைம் பல நூறு கோடி ரூபாய்க்கு தனது ஓடிடி தளத்தின் வெளியிட்டிற்காக இப்படத்தை வாங்கி இருப்பதாக தகவல் வெளியானது. 

இப்படி பட்ட சூழ்நிலையில், தற்பொழுது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரங்கள் சிறப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, தற்பொழுது அப்படத்தில் ஹிட் கொடுக்கும் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சமீபத்தில் வெளியாகும் அனைத்து படங்களிலிலும் மாஸ் வில்லனாக களமிறங்கி மிரட்டி வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

இதனை பற்றிய தகவல்கள் அறிந்த ரஜினியின் ரசிகர்கள், எஸ்.ஜே.சூர்யா இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றால் கண்டிப்பாக இப்படம் மாஸ் ஹிட் கொடுக்கும் என பேசி வருகின்றனர்.


 

இதையும் படிங்க: வெளியானது கூலி படத்தின் புகைப்படங்கள்...! லோகேஷ் கனகராஜுக்கு ஷாக் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share