×
 

ரெட்ரோ படத்திற்கு சூர்யா ஹீரோ அல்ல.. இவர் தான்..! கார்த்திக் சுப்பராஜின் மாஸ் அப்டேட்..!

சூர்யாவின் ரெட்ரோ படத்தில் அவர் ஹீரோ அல்ல என்பதை தெரிவித்து இருக்கிறார் அப்படத்தின் இயக்குனர். 

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே நடிப்பதாலேயே இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இப்படி இருக்க இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

அந்த அளவிற்கு படத்தில் சூர்யாவின் முக தோற்றம், நடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் மிரட்டும் அளவிற்கு உள்ளது. இந்த சூழலில் இப்படம் மிகப்பெரிய கேங்க்ஸ்டர் படமாக தான் இருக்கும் என ரசிகர்களே கூறிவந்த நிலையில், நீங்கள் நினைப்பதை போல் படம் இல்லை என கூறினார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். 

அவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு 'காதல் கதை' என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம். இது நீங்கள் நினைப்பதை போல் கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆதலால் இப்படத்தில் ஆக்ஷனும் உண்டு, மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு. மேலும், ரெட்ரோ படத்தில் சூர்யா, "பாரிவேல் கண்ணன்" என்ற கேரக்டரில் நடிக்கிறார். 

இதையும் படிங்க: ரெட்ரோ படம் வெற்றிக்காக ஜோதிகா சூர்யா தம்பதி சிறப்பு பூஜை..! இருவரின் பக்தி பரவசத்தால் ரசிகர்கள் ஆச்சர்யம்..!

கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருவார். படத்தில் கோபம், அடிதடி என்று வாழ்ந்து, தனக்கான இலக்கு என்ன என்று தெரியாமல் ஓடும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் அன்பாலே அவன் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்வதும், அந்தப் பெண்ணுக்காக வரும் பெரிய பிரச்சனையை தீர்த்து வைப்பதுமான மிரளவைக்கும் கதை. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி.

படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது. தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஆளே இல்லா தனி தீவில் தான் இந்த காட்சிகளை படம் ஆக்கினோம். ஒரு சில படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்தது. மேலும், இந்த படம் நிச்சயமாக நான் இதுவரை எடுத்த கதைகளை போல் அல்லாமலும், சூர்யாவின் நடிப்பில் மக்கள் பார்க்காத முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் இருக்கும் என்றார்.

இதனை அடுத்து, ரெட்ரோ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே தங்களது அனுபவங்களை கூறும்போது அங்கேயும் நடிகர் சூர்யாவால் தான் இந்த கதையே இன்று நன்றாக வந்துள்ளது. அவரிடம் கதை சொல்லும் பொழுது சிறிது நேரம் யோசித்த அவர் கதை மிகவும் ஹீரோத்தனமாக உள்ளது கொஞ்சம் மாற்றம் செய்யுங்கள் என சொன்னாராம் ஆதலால் இந்த படம் கேங்ஸ்டர் படத்தில் இருந்து காதல் படமாக மாறியது என கூறியிருந்தார். 

இப்படி இருக்க, இதுவரை சூர்யாவால் தான் இந்த படம் என்ற இயக்குனர், தற்பொழுது இந்த கதைக்கான ஹீரோ முதலில் சூர்யாவே இல்லை என அந்தர்பல்டி அடித்துள்ளார். ரெட்ரோ படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் பேட்டியில், " நான் முதலில் ரெட்ரோ படத்தின் கதையை ரஜினி சாரை மனதில் வைத்து தான் எழுதினேன்.

ரஜினி சாருக்காக எழுதிய போது இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதையாக இருந்தது. அதன் பிறகு ஆக்ஷன் கதையை சற்று மாற்றி காதல் கதையாக சூர்யா சாரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்து போக, அவரை வைத்து இந்த படத்தை எடுத்தேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூர்யாவா இப்படியெல்லாம் பேசுறாரு..! இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பேசிய வீடியோ வைரல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share