×
 

கோவிந்தா...கோவிந்தா...! நடிகைக்கு 'நாமம்' போட்ட பலே மோசடி மன்னன்..!

 பிரபல நடிகையிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்திருக்கிறான், மோசடி மன்னன் ஒருவன்.

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ரூபிணி, தனது சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

நடிகை ரூபினியை பொதுவாக 80ஸ்களின் 'ராணி' என அழைக்கலாம். அந்த அளவிற்கு அப்போது கொடிகட்டி பறந்த நடிகை.. காரணம் அவர் ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர்..இன்றும் இவருக்கென்று  என தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உள்ளது.. 

இதையும் படிங்க: உடம்புல துணி இல்லாம காட்டவா.. பட வாய்ப்பு கொடுத்துடுவீங்களா..? கடுப்பில் சிவாங்கி..!

அதுமட்டுமல்லாமல் இவர் நடிகர் கமல்ஹாசனுடன் "அபூர்வ சகோதரர்கள்" என்ற திரைப்படத்திலும், ரஜினிகாந்துடன் "மனிதன்" என்ற திரைப்படத்திலும், விஜயகாந்துடன் "கூலிக்காரன்" என்ற திரைப்படத்திலும் நடித்து, தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார். இப்படி இருக்க, அவரது கடைசி படம் என்று பார்த்தால் நடிகர் நெப்போலியன் உடன் நடித்த "தாமரை" என்ற படம்தான். இதனை அடுத்து, தனது கணவரையும் குடும்பத்தையும் கவனிப்பதற்காக பல வருடங்களாக சினிமாவிலிருந்து விலகி இருந்த நடிகை ரூபினி பற்றிய செய்தி ஒன்று தற்பொழுது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அது என்னவெனில்,  பொதுவாகவே நடிகை ரூபினி கடவுள் பக்தி அதிகம் உள்ளவர். வருடம் தவறாது ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு செல்பவர். இதனை எப்படியோ நோட்டமிட்டு அறிந்த தமிழகத்தைச் சேர்ந்த 'சரவணன்' என்பவன், நடிகை ரூபினியை தொடர்பு கொண்டு, தான் பல பிரபலங்களை, எந்தவித தங்கு தடையும் இன்றி ஏழுமலையானை நேரடியாக தரிசிக்க வைத்ததாக கூறி இருக்கிறான். மேலும், பல பிரபலங்களுடன் சரவணன் இருப்பது போன்ற புகைப்படங்களை சித்தரித்து, அந்த போட்டோக்களை ரூபினிக்கு அனுப்பி அவரை நம்ப வைத்திருக்கிறார். இந்த போட்டோக்களையும் அவர் பேச்சையும் நம்பிய நடிகை ரூபினியிடம், ஏழுமலையானை சந்திக்க தனி கட்டணமும், அங்கு தங்குவதற்கான ரூம் செலவு என பல பில்களை போலியாக காணபித்து, கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சத்துக்கும் மேல் பணத்தை வாங்கி இருக்கிறார்.

பின் பணத்தைப் பெற்றுக் கொண்ட சரவணன் அவருக்கு எந்தவித பதிலும் கொடுக்காததால் சந்தேகம் அடைந்த நடிகை ரூபினி, சரவணனை தொடர்பு கொள்ள முயற்சித்து உள்ளார். ஆனால், தொடர்ந்து அவனுடைய செல்போன் எண் சுவிட்ச் ஆஃப்பில் இருப்பதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகை ரூபினி, தற்பொழுது காவல் நிலையத்தை தேடிச் சென்று இருக்கிறார்.

கடவுளை கூட்டம் என்று பாராமல் நேரடியாக சென்று பார்க்க நினைத்திருந்தால் இன்று இந்த பணம் உங்கள் கைகளில் இருந்திருக்கும். விஐபி தரிசனத்திற்காக ஆசைப்பட்டு இன்று பணத்தை இழந்து இருக்கிறீர்களே ரூபிணி மேடம், என நெட்டிசன்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 25 வருடம்.. காதல் டூ கல்யாணம் முதல் இப்போது வரை! வைரலாகும் விஜயலட்சுமி போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share