சலார் 2 வருவதில் புதிய சிக்கல்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபாஸ்..!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சலார் 2 திரைப்படத்தை தயாரிப்பதில் புதிய சிக்கல் வந்துள்ளது.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை பிரபாஸை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவரது பெயர் பிரபாஸ் என அழைக்க மாட்டார்கள் 'பாகுபலி' என்றே அழைப்பார்கள். அந்த அளவிற்கு அப்படத்தில் கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார். பல்வாள்தேவன் தன்னை கொலைசெய்ய சொன்ன பிறகும், தனது முதுகில் குத்திய கட்டப்பாவிடம் "அம்மா ஜாக்கிரதை" என முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்தில் "இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்" என கூறி பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
பாகுபலிக்கு பிறகு இப்படிப்பட்ட பிரமாண்டமான கதை பிரபாஸுக்கு அமையவில்லையே என அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இப்படி இருக்க "பிரஷாந்த் நீல்" போன்ற ஓர் இயக்குனரின் கையில் 'பிரபாஸ்' கிடைத்தால் அட்டகாசமான படம் ஒன்று கிடைக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதையும் படிங்க: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... போலியான பெயரில் வலம் வந்த ஸ்ருதிஹாசன்..!!
அந்த வகையில், எல்லோரும் எதிர்பார்த்தபடி "சலார்" என்ற பெயரில் பிரபாஸ் படம் வெளியானது. அப்படத்தின் கதையம்சத்தை பார்க்கும் பொழுது, படத்தின் தொடக்கத்தில், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) வருகிறார். விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு கும்பல் அவரை கடத்தி செல்ல முயல, தேவா (பிரபாஸ்) மட்டுமே உதவ முடியும் என்ற சூழ்நிலையில் அவரிடம் உதவி கேட்கப்படுகிறது.
பின் உதவ முன்வந்த தேவா, ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) அசாமில் உள்ள டின் சுகியா எனும் கிராமத்தில் தனது தாயின் கட்டுப்பாட்டில் வைக்கிறார். இப்படி இருக்க, ஆத்யாவை கண்டுபிடித்த கும்பல் தேவாவையும் கண்டு பிடிக்கின்றனர். பின்பு கான்ஸாரில் இரண்டு நண்பர்களின் கதைகளை காண்பித்து, தேவாவின் நண்பனான வரதராஜ மன்னாருக்கு எப்படி அரியாசனம் கிடைக்கும் என்பதை இரண்டாம் பாகத்தில் காணலாம் என படத்தை முடித்து இருந்தனர். இப்படத்தை பார்த்த சிலர் "படத்தில் பில்டப் இல்லை..பில்டப்பில் தான் படமே" என்றெல்லாம் கூறினர்.
ஆனாலும் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என பலரும் ஆவலுடன் ஏதிர்பார்த்து காத்து கொண்டு இருக்க, பிரபாஸ் ரசிகர்களின் தலையில் குண்டை வீசியிருக்கிறார். என்னவெனில், சலார் 2 திரைப்படத்தை பிரபாஸ் தற்போதைக்கு நடிக்க முடியாது என தள்ளிவைத்து இருக்கிறார். காரணம், சலார் படத்திற்கு முன், ஹனு-மான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பதால், அவர் படத்தில் நடித்த பின்பு "சலார் 2"வில் நடிப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் வேதனையின் உச்சத்துக்கே சென்று இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம்.. கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கிய ஜியோ..!