சல்மானை டார்ச்சர் செய்யும் ராஷ்மிகா..! "சிக்கந்தர்" படத்தில் புதிய அவதாரம் எடுத்த நடிகை..!
நாளை வெளியாக இருக்கும் திரைப்படத்தில் ராஷ்மிகாவின் வேடம் இப்படி தான் இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ரஷ்மிகா மந்தண்ணா கடந்த 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர்.
பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானார்.
இதுவரை தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: அவங்க பொண்ணுக்கூடயும் நடிப்பேன்... வயது வித்தியாச விவகாரத்தில் சல்மான் தடாலடி!!
இதனை அடுத்து, நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான "சாவா" படம் பல கோடிகளை கடந்து வெற்றி படமாக மாறி இருந்தது. குறிப்பாக மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயி பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் காதலர் தினம் அன்று வெளியானது.
முழுக்க முழுக்க ஹிந்தியில் உருவாகிய இந்த படம் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகாவும் நடித்து இருந்தனர். இப்பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் ராஷ்மிகாவை புகழ்ந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, இதுவரை கோலிவுட்டில் கலக்கி வந்த ராஷ்மிகா பல பிரச்சனைகளை கடந்து தற்பொழுது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளியாக தயாராக உள்ள "சிக்கந்தர்" திரைபடத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் ராஷ்மிகா.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து அனைவரது பாராட்டையும் பெற்று வந்த நிலையில், சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து வருவதை குறித்து ராஷ்மிகா ஒரு பேட்டியில் "இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்றால் அவர் சல்மான் கான் தான், அப்படிப்பட்டவருடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ராஷ்மிகா நடிக்கும் முதல் திரில்லர் படமாக பார்க்கப்படும் இப்படம் வரும் "மார்ச் 30" தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என ரசிகர்கள் தற்பொழுது பேசி வருவதுடன், கதை சுருக்கமும் வெளியாகி உள்ளது.
அதன் படி நாளை வெளியாக உள்ள இப்படத்தில் ராஷ்மிகா பேயாக நடித்து இருக்கிறார் என ஒரு தகவல் பரவி வருகிறது மற்றும் படத்தின் ட்ரெய்லரில் அப்படி காட்டப்படவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளின் அடிப்படையில் இப்படி கூறப்படுகிறது. குறிப்பாக ராஷ்மிகா இறந்துவிட்ட நிலையில், சல்மான் கானுடன் ராஷ்மிகா ஆன்மா இருப்பதை போல் அவர் உணரும் வகையில் இந்த கதை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது படத்திற்கான முன்பதிவை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சல்மான் கானை பற்றி ராஷ்மிகா சொன்ன விஷயம்.. ஒரே வார்த்தையில் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகை..!