×
 

அவங்க பொண்ணுக்கூடயும் நடிப்பேன்... வயது வித்தியாச விவகாரத்தில் சல்மான் தடாலடி!!

சல்மான் கான் - ரஷ்மிகா வயது வித்தியாச விவகாரம் குறித்து சல்மான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் இப்போது சிக்கந்தர் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், கிஷோர் உள்ளிட்டோரும் படத்தில் முக்கியமான ரோல்களை ஏற்றிருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையில் சல்மானின் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிக்கந்தர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் சல்மான் கான் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சல்மான் கான். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். 90களில் நடிக்க தொடங்கிய இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் இவர் இன்று வரை துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். இவருக்கு போட்டியாக ஷாருக் கான், கிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் வந்தாலும் தற்போது வரை அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. 

சல்மான் கானுக்கு தற்போது 57 வயது ஆகும் நிலையில் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்கிடையே அவர் ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த காதல் பிரேக் ஆனதாகவும் அதற்கு சல்மானின் குணமே காரணம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனாலும் இவர் மீது பெண்களுக்கு இன்றும் கிரஷ் உள்ளது என்றே சொல்லலாம். இவர் சமீபத்தில் நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் , டைகர் 3 உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடாததால் மெகா ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த அவர், ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு முதலில் கமிட்டான நடிகை இவங்கதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குநர்..!

சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், கிஷோர் உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சிக்கந்தர் என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகதீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது சல்மானிடம் அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சல்மான், ராஷ்மிகாவுக்கும் எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் இருக்கிறது என்று பேசுகிறார்கள். வயது வித்தியாசத்தில் ஹீரோயினுக்கோ அவரது அப்பாவுக்கோ பிரச்னை இல்லை. அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்னை வந்தது. ராஷ்மிகாவுக்கு திருமணமாகி அவருக்கு மகள் பிறந்தால், ராஷ்மிகாவின் சம்மதத்தை பெற்று அவரது மகளுடனும் நடிப்பேன் என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.  

இதையும் படிங்க: சாய்ப்பல்லவியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா.. கம் பேக் கொடுத்து அசத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share