கோடிகளில் ஜீவனாம்சம் கொடுக்க வந்த நடிகர்.. தன்மான சிங்கமாய் மறுத்த நடிகை..!
பல நூறு கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்து வாங்க மறுத்து இருக்கிறார் தன்மான சிங்காமான நடிகை.
தமிழ், தெலுங்கி, கன்னடம் உள்ளிட்ட சினிமா துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை சமந்தா, இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர்.
எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இதனால் மனவேதனையில் இருந்த சமந்தா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.
இதனை அடுத்து, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் என்ற செய்தி வெளியாகி அனைவரும் புறணி பேச, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி படஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.
இதையும் படிங்க: "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு முதலில் கமிட்டான நடிகை இவங்கதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குநர்..!
நாக சைதன்யாவை தான் காதலிக்க காரணம் ஒரு ரசிகர் தான் என சமீபத்தில் சோபிதா துலிபாலா கூறியிருந்தார். அதில், ஒருநாள் தான் ரசிகர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கூறிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் 'உங்களை நாக சைதன்யா இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் பொழுது நீங்கள் மட்டும் ஏன் அவரை ஃபாலோ செய்யவில்லை?' என கேட்டிருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், எனது செல்போனை எடுத்து அவரது இன்ஸ்டா கணக்கிற்கு சென்று பார்த்தேன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஏனெனில் எனக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவர் என்னை ஏற்க்கனவே ஃபாலோ செய்து எனது பதிவுகளுக்கு லைக் போட்டு இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அவரது இன்ஸ்டாவில் வெறும் 70 பேரை தான் ஃபாலோ செய்து இருந்தார். அதில் என் கணக்கும் ஒன்று என்பது எனக்கு ஸ்பெஷலாக இருந்தது. அதற்கு பின்பு தான் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்து, அது காதலாக மாறி தற்பொழுது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது என கூறியிருந்தார்.
இப்படி இருக்க, தற்பொழுது தனது திருமண முறிவு மற்றும் வாழக்கையில் நடந்த பல கசப்பான நினைவுகளில் இருந்து வெளியே வந்த சமந்தா, "இனி சினிமா தான் என் முதல் காதலன்" என கூறி, தற்பொழுது நிறைய படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை பார்த்து சற்று உணர்ச்சி வசத்தில் கண்கலங்கினார்.
அப்போது பேசிய அவர் "கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டான படங்களையும் கொடுக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்றும் எனக்குத் தெரியவில்லை" என மேடையில் கண்கலங்கி பேசி இருந்தார்.
இப்படி பல வலிகளை கடந்து வந்த சமந்தாவுடன் இருந்து பிரிவதற்காக நாக சைதன்யா தரப்பில் இருந்து ஜீவனாம்சம் தர தயாராக இருந்ததற்கான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகர் நாக சைதன்யா தரப்பில் இருந்து ரூ.200 கோடியை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முன் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த ரூ. 200 கோடி ஜீவனாம்சத்தை நடிகை சமந்தா வாங்க மறுத்து இருக்கிறார்.
மேலும், தனக்கு யாருடைய பணமும் வேண்டாம் என்றும், நான் உழைத்து சாம்பாதித்து கொள்வேன் என்றும் சமந்தா கூறி 'தன்மான சிங்கமாய்' அங்கிருந்து வந்திருக்கிறார் என சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க: சாய்ப்பல்லவியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா.. கம் பேக் கொடுத்து அசத்தல்..!