×
 

சமந்தாவுக்காக கோவில் கட்டிய தீவிர ரசிகன்..! வசைபாடி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

நடிகை சமந்தாவின் மீதுள்ள காதலால் அவரது உருவ சிலையுடன் கோவிலை கட்டி இருக்கிறார் ரசிகர் ஒருவர். 

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான், கத்தி, தங்க மகன், 10 என்றதுக்குள்ள, பெங்களூர் நாட்கள், தெறி, 24, மெர்சல், யூ டர்ன், நடிகையர் திலகம், சீமராஜா, இரும்பு திரை, ஓ. பேபி, சூப்பர் டீலக்ஸ், புஸ்பா (தி ரைஸ்), யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல், குஷி, சகுந்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சமந்தா. 

பார்க்க குட்டி குஷ்பூவை போல் இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம், இவரது நடிப்பில் நடிகர் விஜயுடன் வெளியான 'கத்தி' திரைப்படத்தில் "நான் குளிச்சிட்டு, ஃபிரஷ் பண்ணிட்டு வரேன்... பாய்" என குழந்தை தனமாக பேசி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். பின் 'தெறி' படத்தில் நடிகர் விஜயிடம் சாகும் தருவாயில் "நான் உனக்கு எப்படி பட்ட மனைவி" என கேட்டு அனைவரையும் கலங்க செய்தவர். அதே போல் 'மெர்சல்' திரைப்படத்தில் நடிகர் விஜயை பார்த்து "டேய் தம்பி உன்னதாண்டா வாடா.. எனவும் அக்கா உனக்கு ரோஸ்மில்க் வாங்கித்தரேண்டா" எனவும் கூறி பலரது மனதில் ஆழமாக பதியப்பட்டார். 

இதையும் படிங்க: சமந்தா எக்ஸ் புருஷனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..! சாம்க்காக போர் கொடி தூக்கி அசத்தல்..!

அதே போல் விக்ரமின் '10 எண்றதுக்குள்ள' படத்தில் சுட்டித்தனமான பெண்ணாகவும், 'அஞ்சான்' திரைப்படத்தில் சூர்யாவை கவரும் அழகிய ஹீரோயினாகவும் வந்து "ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே" என பாடலுக்கு நடனமாடி இளசுகளை காதல் வயப்பட வைத்தார். இப்படி என்றும் சிரித்த முகத்துடன் இருந்த சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததில் இருந்து வருத்தத்தில் இருந்தார். குறிப்பாக, நாக சைதன்யா தரப்பினர் நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் இதனை வாங்க மறுத்த சமந்தா என்னால் உழைத்து முன்னேற முடியும். அதற்குண்டான திறமை என்னிடம் உள்ளது. உங்கள் பணத்தை நீங்களே வைத்துங்கள் என்று சொல்லி வந்துவிட்டார். 

ஆனாலும் அவரது முன்னாள் கணவர் சோபிதாவை திருமணம் செய்ததை கண்டு வருத்தமடைந்த சமந்தா, பல நாட்களுக்கு பின் தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார். பல மேடைகளில் எரிய சமந்தா ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை கண்டு நெகிழ்ந்து உங்கள் அன்புக்கு நான் என்ன தருவேனோ என கண்கலங்கி பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சமந்தா சோலோவாக பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகிறார். 

இப்படி சமந்தாவை நேசிக்கும் பல ரசிகர்களுக்கு மத்தியில், அவர் மீதுள்ள அதிகப்படியான அன்பை வெளிக்காட்டும் வகையில் அவரது ரசிகர் செய்துள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், கடந்த 2023-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊரில் உள்ள அவரது வீட்டின் அருகே சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கட்டியுள்ளார்.


இந்த கோவில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2023-ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த சமந்தா ரசிகர் இப்புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவிட அது தற்பொழுது வைரளாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், ஏன்பா... இப்படி உயிரோடு நடனமாடி கொண்டிருப்பவர்களை சிலையாக்கி கோவில் காட்டுறிங்க, அதற்கு பதிலாக உங்களுக்கு ஏற்ற தொழிலை செய்து இருக்கலாம் இல்லையா, என தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சந்தேகப்பட்ட ரசிகர்..! ஸ்மார்ட்டாக பதில் கூறி எஸ்கேப்பான சமந்தா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share