×
 

முன்னாள் கணவரின் டாட்டூவை அழித்த சமந்தா.. இதுவும் கடந்து போகும் என வெளியிட்ட போட்டோ..!

நாக சைதன்யாவின் நினைவாக சமந்தா கையில் வைத்திருந்த டேட்டோவை தற்பொழுது அழித்து இருக்கிறார். 

பார்க்க குஷ்பூவுக்கு தங்கை போல் இருக்கிறார் என பல ரசிகர்களின் பாராட்டையும் அவர்களை மனதையும் கொள்ளைகொண்டவர் என்றால் அது நடிகை சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து, சமந்தா நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்கள் தான். குறிப்பாக அவர் நடிப்பில். வெளியான "நான் ஈ" திரைப்படத்தில் சமந்தாவின் தோற்றம் அவரது அழகுக்கே கிடைத்த பரிசு எனலாம் அப்படி இருக்கும்.

இப்படி திரை துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். 

இதையும் படிங்க: "ஆண்டவன் சொல்றா அருணாச்சலம் முடிக்கிறா" அது அப்போ.. ஜோதிகா, ரம்யா சொல்றாங்க.. சமந்தா முடிச்சிட்டாங்க.. இது இப்போ..!

இதனை அடுத்து, நீண்ட நாட்களாக தனிமையில் இருந்த நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியாகி பேசுபொருளானது. வெளியான செய்தி உண்மைதான் என்பதற்கேற்ப இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை இவர்களது திருமணம் நடைபெற்றது.

இதனை பார்த்து வேதனை அடைந்த சமந்தா, அதற்கு பின் நீண்ட நாட்களாக இருந்த தனது மௌனவிரதத்தை கலைத்து ஒரு பேட்டி அளித்தார். அதில் "நான் தற்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முதலில் முடிக்க வேண்டும் என்றும் அடுத்து ஒரு படம் உள்ளது அதன்பின் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வேறொரு படம் உள்ளது. ஆதலால் இனி தனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்படத்தில் இருந்து விலகிய காலமெல்லாம் முடிந்துவிட்டது. எனவே சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, ஆலா மொடலைண்டி, ஜபர்தாஸ்த், கல்யாண வைபோகமே, ஓ! பேபி, பித்த கதலு, அன்னி மஞ்சி சகுனமுலே, சாம் ஜாம் போன்ற படங்களை இயக்கி, ஒரு இயக்குனரின் சிறந்த முதல் படத்திற்கான நந்தி விருது, சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது அல மொடலைண்டிக்காக தெலுங்கு, ஹைதராபாத் டைம்ஸ் திரைப்பட விருதுகள் 2011,சிறந்த அறிமுக இயக்குனருக்கான SIIMA விருது, முதலிய விருதுகளுக்கு சொந்தக்காரியான இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் திரைப்படத்தில் நடிகை சமந்தா இணைந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், முற்றிலும் பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையாக உருவாகி வரும் "பரதா" என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனுடன், சமந்தா அனைத்து பெண்களுக்கும் ஸ்விட்டான மெசேஜ் சொல்லும்  கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.  இந்த நிலையில், விவாகரத்திற்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அவரவர்கள் கைகளில் ஒரே மாதிரி டாட்டூ போட்டு இருந்தனர்.

விவாகரத்துக்கு பிறகும் சமந்தா அந்த டாட்டூவை அப்படியே அழிக்காமல் தனது கைகளில் சுமந்து இருந்தார். ஆனால் தற்போது சமந்தா, கூடவே இல்லாத கணவரின் டேட்டோ மட்டும் எதற்கு என முடிவெடுத்து அதனை தனது கைகளில் இருந்து அளித்துள்ளார். இதனை காண்பிக்கும் வகையில் சமந்தா வெளியிட்ட போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. 

இதையும் படிங்க: சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு... 110 கிலோவை அசால்ட்டாக தூக்கி மாஸ் காட்டிய சமந்தா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share