உங்களை நம்பி படம் எடுத்தா இப்படியா பண்ணுவீங்க..! மக்களை வசைபாடிய சமுத்திரக்கனி..!
தனது முழு ஆதங்கத்தையும் ஒரே மேடையில் கொட்டி தீர்த்துள்ளார் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி.
முன்பு உள்ள சினிமாவை காட்டிலும் இப்பொழுது உள்ள சினிமாக்கள் சிரிப்பதற்காகவும் பொழுது போக்கிற்காகவும் மட்டுமே உள்ளது. உங்களுக்கு இந்த சமூகத்தை பற்றி சொல்லுகிறேன் என தீய பழக்கங்களை எப்படி செய்வது என்பதை கற்றுக்கொடுக்கும் படங்களாகவும், சண்டைகளை ஊக்குவித்து கெத்தாக வாழ்வது எப்படி என காண்பிப்பது. போதை பொருட்களை ஒழிப்பதாக சொல்லி அதனை எப்படி வாங்கி உபயோகிப்பது, பெண்களை சீரழிக்கிறார்கள், அவர்களை காத்துக்கொள்ளவேண்டும் என சொல்லி, சிறார்களுக்கு காம இச்சையை தூண்டும் விதமான பல படங்கள் தற்பொழுது வெளியாகி வருகிறது.
இதனை பார்த்து கெட்டு போகும் இந்த காலத்து இளசுகள் சிலர், அதனை தாரக மந்திரமாக எடுத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட படங்களுக்கு மத்தியில், கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பது, பள்ளிமாணவர்களை ஊக்குவிப்பது, பெற்றவர்களுக்கு பிள்ளைகளை புரிய வைப்பது, பிள்ளைகளுக்கு பெற்றவர்களை புரியவைப்பது, கணவன் மனைவிக்காகன நல்ல இல்லறங்களை போதிக்கும் படங்களின் வரத்துக்கள் குறைந்து விட்டன.
ஆனால் இப்படிப்பட்ட நல்ல கருத்துள்ள படங்களை மக்கள் பார்த்தாலும் சரி, பார்க்காமல் போனாலும் சரி, என இவைகளை படமாக எடுத்து வெளியிட்டே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல திரைப்படங்களை வாரி கொடுத்து பலரின் அறிவுக்கண்ணை திறந்த இயக்குனர் தான் சமுத்திரக்கனி.
இதையும் படிங்க: 50-வது ஆண்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை..!
இன்றும் பார்க்க வாட்ட சாட்டமாக இருக்கும் இவர், நடித்த "சாட்டை" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. ஒரு சில வருடங்களுக்கு முன்பு தயாளன் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் தோன்றிய சமுத்திரக்கனியின் இந்த படம் வெளியான பொழுது 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல பள்ளிகளில் இப்படம் ஒளிபரப்பப்பட்டு அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனை அடுத்து "அடுத்த சாட்டை" என்ற படத்தின் மூலம் பல கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை சீர்படுத்தும் படத்தை எடுத்து அசத்தினார்.
2003ம் ஆண்டு "உன்னை சரணடைந்தேன்" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாத்துறையில் இயக்குனராக அறிமுகமானார் சமுத்திரக்கனி. இவரது இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு "சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது"கிடைத்தது. நெறஞ்ச மனசு, தெலுங்கில் உருவான 'நாலு' படத்திற்காக, 'விருப்பமான இயக்குநர் விஜய் விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்' ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றார். பின் 2009ம் ஆண்டு வெளியான "நாடோடிகள்" திரைப்படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான விஜய் விருது மற்றும் சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்க்கான விஜய் விருதுகள் வழங்கப்பட்டது. இன்னும் பல படங்களை இயக்கியுள்ளார்.
இதுவரை இவர் நடித்த படங்கள் என்றால் பார்த்தாலே பரவசம், பொய், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், சிக்கார், ஈசன், திருவாம்பாடி தாம்பன், சாட்டை, நீர்ப்பறவை, தி ஹிட் லிஸ்ட், தி ரிப்போர்டர், பதிராமனல், டீ கம்பேனி, வேலையில்லா பட்டதாரி, தேசிய விருது பெற்ற விசாரணை, ரஜினி முருகன், அம்மா கணக்கு, அப்பா, வெற்றிவேல், வேலையில்லா பட்டதாரி 2, தொண்டன், கூட்டத்தில் ஒருத்தன், ஆண் தேவதை, மதுர வீரன், வட சென்னை, 60 வயது மாநிறம், காலா, கோலி சோடா 2, ஏமாளி, அடுத்த சாட்டை, பெட்டிக்கடை, காப்பான், சில்லு கருப்பட்டி, கொளஞ்சி, ஜாக்பாட், நம்ம வீட்டுப் பிள்ளை, பேரன்பு, எட்டுத்திக்கும் பற,
வால்டர், நாங்க ரொம்ப பிசி, க/பெ. ரணசிங்கம், நாடோடிகள் 2, ஏலே, புலிக்குத்தி பாண்டி, ரைட்டர், சங்கத்தலைவன், வெள்ளை யானை, சித்திரைச் செவ்வானம், தலைவி, விநோதய சித்தம், எம் ஜி ஆர் மகன், உடன்பிறப்பே, டான், மாறன், ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்), யானை, பொய்க்கால் குதிரை, ஆர் யு ஓகே பேபி, விமானம், வாத்தி, நான் கடவுள் இல்லை, தலைக்கூத்தல், துணிவு, திரு. மாணிக்கம், அந்தகன், ராஜா கிளி, க க ந மார்கன், நந்தன், இந்தியன் 2, ஹிட் லிஸ்ட், யாவரும் வல்லவரே, சைரன், கருடன், ரத்னம், வணங்கான், ராமம் ராகவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்படிப்பட்ட பல நல்ல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ள சமுத்திரக்கனி சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நல்ல திரைப்படங்கள் குறித்தும், அதற்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கிறது என்பது குறித்தும் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். அதில், " அப்பா, சாட்டை போன்ற கருத்துள்ள நல்ல திரைப்படங்கள் எல்லாம் உடனே ரசிகர்களிடம் சென்று சேராது அவர்களுக்கு அது பிடிப்பதும் இல்லை. நீங்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார் படம் விஜய் படம் அஜித் படம் என்றால் முதல் காட்சிக்கு போவீங்க.
இந்த மாதிரியான கருத்துள்ள படங்களுக்கு எல்லாம் வருவீர்களா? இந்தத் திரைப்படங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அடடே படம் நல்லா இருக்கே-ன்னு சொல்லிட்டு போயிடுவீங்க, ஆனால், இது போன்ற படங்களுக்கு உழைப்பு என்பது மிகவும் பெரியது. நான் ஏழு வருடங்கள் சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் வைத்து தான் "அப்பா" திரைப்படத்தை எடுத்தேன். ஆனால், அந்தத் திரைப்படம் எனக்கு நஷ்டத்தை தான் கொடுத்தது" என கூறியுள்ளார்."
இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் வருத்தம் எங்களுக்கு புரிகிறது இக்காலத்து இளசுகளை சமாளிக்கும் படங்களை எப்படி உருவாக்குவது என தெரியாமல் தான் இயக்குனர் சங்கரே குழம்பி போய் அமர்ந்து இருக்கிறார் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த "குட் பேட் அக்லி"...! வசூல் வேட்டையிலும் சாதனை..!