மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்...! ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உருக்கம்..!
மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரண செய்தியை கேட்டு வருத்தப்படுவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உருக்கமாக பேசியிருக்கிறார்.
நடிகர் விஜயின் "பத்ரி" திரைப்படத்தில் தன் அண்ணனுக்காக ரிங்கில் இறங்கும் விஜய்க்கு, கோச்சாக நடித்து பிரபலமானவர் தான் மறைந்த நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி. உண்மையிலேயே இவர் படத்தில் மட்டும் மாஸ்டர் அல்ல நிஜ உலகிலும் பல மாணவர்களுக்கு சிறந்த ஆசானாக வாழ்ந்தவர். இப்படிப்பட்டவரின், ஆரம்ப வாழ்க்கை சினிமாவில் தொடங்கிய படம் என்றால் அது உலக நாயகன் நடிப்பில் 1986ல் வெளியான "புன்னகை மன்னன்" திரைப்படம் தான்.
அப்படத்தில் நடித்து தனக்கான அங்கிகாரத்தை சினிமாவில் பிடித்தவர். இப்படி பட்ட மாஸ்டர் ஷிகான் ஹுசைனி சிறந்த வில்வித்தை வீரர் என்பதால் தன்னை போல் பல மாணவர்கள் வில்வித்தையில் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணி அவர்களுக்கு பயிற்சியாளராக மாறினார். பல மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சிகளை வழங்கி இருக்கிறார்.
மேலும், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் நான் இறந்த பிறகு, யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் மண்ணுக்கு செல்லும் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சி பணிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தனமாக அளிப்பதாகவும் தனது இதயத்தை மட்டும் தன் கராத்தே மாணவர்களிடம் கொடுத்து விடுங்கள், அவர்கள் அதனை பத்திரமாக பாதுகாத்து கொள்வார்கள் என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் கடைசி கோரிக்கை.. தவெக தலைவர் விஜய் நிறைவேற்றுவாரா..?
இதனை அடுத்து, 60 வயதான ஷிகான் ஹுசைனியின் வேண்டுதலுக்கு ஏற்ப இன்று அதிகாலை 1.40 மணியளவில் அவரது உடலில் இருந்து அவரது ஆன்மா பிரிந்தது. இப்படி இருக்க அவரது மரணத்திற்கு முன்பு அவர் தனியார் சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டி தற்பொழுது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது அதில், மூன்று காரியங்களை குறித்து அவர் பேசியிருந்தார். முதலில் தான் மரணத்திற்கு பயப்படுபவன் இல்லை, நான் கராத்தே மாஸ்டர் என் மரணம் குறித்து துளி கூட தனக்கு பயமில்லை என்று கூறியிருந்தார்.
இரண்டாவதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவிற்கு தான் வழங்கிய ரத்தத்தினால் ஆன பரிசை பற்றி நினைவு கூர்ந்தார். அதன் பின், தான் மரித்தால் தனது உடலை மூன்று நாள் தனது அலுவலக நாற்காலியில் வைத்து பிறகு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மூன்றாவதாக, நடிகர் விஜய் எதிர்காலத்தில், வீட்டிற்கு ஒரு வில்வித்தை வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்றும் தனக்கு பிரியமான பவன் கல்யாண், தான் வாழ்ந்த இடத்தை வாங்கி, அதில் கராத்தே மற்றும் வில்வித்தை மாணாக்கர்களுக்கு பயிற்சி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு பவன் கல்யாண் என்ன கூறுவார் என அனைவரும் காத்து கொண்டிருந்த வேளையில் ஷிகான் ஹுசைனி திடீரென மரித்து போனார். இருப்பினும் தற்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தனது இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். மேலும், ஷிஹான் ஹுசைனி உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியவந்தது.
இதனை அடுத்து, உடனடியாக அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்பொழுது, சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப தகுந்த ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதற்காக அவரை அழைத்து செல்ல முடிவெடுத்து, அவரை காண 29ம் தேதி சென்னை வர முடிவு எடுத்தேன்; ஆனால் அதற்குள் அவரின் இறப்பு செய்தியை கேட்டது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவரது ஆன்மா ஷாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என வேதனையோடு பேசி இருக்கிறார்.
இதனை பார்த்த மக்கள், ஒருவரை பார்க்க நினைத்து பின் நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என தள்ளிப்போட்டால் மீண்டும் அதே நேரமும் காலமும் திரும்பி வராது ஆதலால் ஒருவர் இருக்கும் பொழுதே அவரை வந்து பார்த்து விடுங்கள், இல்லையெனில் அவர்களை காண இறைவன் வந்து விடுவார் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திராவின் சீமான் பவன் கல்யான்...! யோவ்.. பிஸ்தா பருப்பு என வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்...!