×
 

ஆந்திராவின் சீமான் பவன் கல்யான்...! யோவ்.. பிஸ்தா பருப்பு என வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்...!

ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணை வம்பிழுக்கும் நோக்கில் பதிவிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

மொழி பிரச்சினை தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த சில நாட்களுக்கு முன்பு  சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். சமீபத்தில், அவரது கட்சியின் 11வது ஆண்டு விழாவில் பேசிய நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், "நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணவும் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் மொழியியல் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.. என்கிறார்.

அதோடு கூட, இந்தியாவிற்குத் தமிழ் உட்படப் பல மொழிகள் தேவை, இரண்டு மொழிகள் மட்டும் கண்டிப்பாக போதாது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்? ஆனால், அதே தமிழர்களே அவர்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள்? அவர்களுக்கு பாலிவுட் பணம் மட்டும் வேண்டும்? ஆனால், இந்தி மட்டும் வேண்டாம் எதிர்ப்பார்கள், இந்த லாஜிக் எனக்கு புரியவில்லை" என்று பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அப்ப விஜய்.. இப்ப இளையராஜா.. ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கிய இளையராஜா.. திகைக்க வைத்த ஒற்றை பதிவு..!

அதனை தொடர்ந்து, தமிழ்நாடு இந்தி பேசும் பீகார் தொழிலாளர்களை நம்பி தான் உள்ளது. இப்படி அவர்களின் தொழிலில் மூலாதனமாக உள்ள இந்தியை வெறுக்கிறோம், எதிர்க்கிறோம் எனச் சொல்கிறார்கள்.தமிழ்நாடு இப்படி கூறுவது எப்படி நியாயமானதாக இருக்கும். நமது இந்தியா என்பது கோபப்படும்போது வெட்டி பிரித்துக் கொள்ளக் கூடிய கேக் துண்டா? நமது நாட்டின் ஒருமைப்பாட்டை குறைக்க முயற்சிப்பவர்களை எதிர்க்க என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர் ஒன்றாக இணைந்து நிற்போம்" என பேசியிருந்தார்.

இவர் கூறிய இந்த வார்த்தைகள் பலரது கவனத்தையும் ஈர்த்தத்துடன் இணையத்திலும் பரவ, நெட்டிசன்கள் பவன் கல்யாணை வச்சி செய்தனர். இதனை அடுத்து நிலைமையை புரிந்து கொண்ட பவன் கல்யான், தான் சொன்னதற்கு விளக்கமளித்தார். அதாவது,  தான் ஒரு நாளும் இந்தியை ஒரு மொழியாக எதிர்த்தது இல்லை, அதேநேரம் இந்தியைக் கட்டாயப்படுத்தும் போது அதை நிச்சயமாக நான் எதிர்ப்பேன், மேலும், புதிய கல்விக் கொள்கை 2020ம் கூட எந்தவொரு இடத்திலும் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது பவன் கல்யாண் கொடுத்த விளக்கத்தையும் இணையயத்தில் பதிவு செய்து வரும் நெட்டிசன்கள், அவரை வசைபாடி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் விஜயின் மீட்டிங் நடக்கும் இடங்களை குறிவைத்து "நீங்கள் சைவ உணவு கொள்கையை திணிக்கிறீர்கள்" என்றும்  சினிமா துறைகளை தாண்டி தற்பொழுது அரசியலையும் விமர்ச்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் கண்களில் பவன் கல்யாண் பட்டுள்ளார். இதனை பார்த்த அவர் சற்றும் தயங்காமல் பவன் கல்யாணை வம்பிழுக்கும் நோக்கில் இரண்டு பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்.

அதில், முதலாவதாக போடுறது சாமியார் கெட்டப், பேசறது எல்லாம் சனாதனம், லட்டு, ஹிந்தி, சமஸ்கிருதம். பிற மதத்தினர் மற்றும் சனாதனத்தை‌ ஏற்காத இந்துக்கள் என் படத்தை பார்க்க வர வேண்டாம்னு சொல்ல மட்டும் வாய் வராது. பட வசூலுக்கு எல்லாரும் தேவை. யோவ்.. பிஸ்தா பருப்பு என்று வம்பிழுக்கும் நோக்கிலும்.


இரண்டாவதாக, ஆந்திராவின் சீமான்: திராவிட கலாச்சாரம் மீது கை வைத்தால் சும்மா விடமாட்டேன் என 2017 ஆம் ஆண்டு பொங்கிய வாய்தான் இது. இப்படி மாத்தி மாத்தி பேசுறதுக்கு.. முடியை சிலுப்பறது, பருப்பு மாதிரி பாடி லாங்குவேஜ் காட்டுறதுன்னு அலப்பறை வேற. என்றும் இதுக்கு முன்ன பேசுனதுக்கு அவங்க ஊர்லயே செமத்தியாக வாங்கிட்டாரு போல. அதான் இந்த அந்தர் பல்டி. எனவும் பதிவிட்டு இருப்பது தற்பொழுது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதையும் படிங்க: சப்தம் படத்தில் சத்தம் தான் இருக்கு...நெகட்டிவ் கமெண்ட் கொடுத்த ப்ளூ சட்டை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share