குழந்தையில் கியூட்டாக இருக்கும் டி.இமான்.. மழலை சிரிப்பில் இருக்கும் புகைப்படம் வைரல்..!
குழந்தையில் தனது அம்மா அப்பா அரவணைப்பில் அழகாக இருக்கும் இமானின் புகைப்படம் சிக்கியுள்ளது.
இசைத்துறையில் எப்படி ஏ ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, ஹிப்பாப் ஆதி, ஜிவி பிரகாஷ், அனிருத் என பலரும் காதல், ரேப், மெலடி, ராக், வைப் என பலவகையான பாடல்களையும் இசைகளையும் உருவாக்கினாலும்,கிராமத்து பாடல்களையும், கிராமத்து காதல்களையும், கண்ணீர் கவலைகளையும் தனித்துவமாக காண்பித்து, தனது இசையால் அனைவரையும் கலங்கடிக்க செய்து காதல் வயப்படுத்துவார் என்ற பெருமைகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் தான் டி.இமான்.
இப்படிப்பட்ட, இமான் அப்பொழுது பார்க்க குண்டாக எஸ்.பி.பி போல் இருந்தார் ஆனால் கொஞ்ச நாளில் மெலிந்து காணப்படுகிறார். இந்த அளவிற்கு அவரது வாழக்கையில் சோகங்களை அனுபவித்து உள்ளார். இவர் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும் இவரை அதிகமாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரி உடன் காணலாம். எந்த மேடை நிகழ்ச்சிகள் என்றாலும் எந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி என்றாலும் இவர்கள் மூவரும் ஒரே கூட்டணியாக நின்று அண்ணன் தம்பி என்று பேசிக் கொண்டும் மற்றவர்களை கலாய்த்து கொண்டும் இருப்பர்.
இதையும் படிங்க: என் எக்ஸ் தளத்தை ஹேக் பண்ணிட்டாங்க... எலான் மஸ்குக்கு கோரிக்கை வைத்த இசையமைப்பாளர் டி.இமான்..!
இப்படி அண்ணன் தம்பி போல் ஒன்றாக உறவாடிய சிவகார்த்திகேயன் மீது ஒருநாள் பயங்கரமான குற்றச்சாட்டை வைத்தார் டி.இமான். நம்பி வீட்டுக்குள் வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் காதல் வயப்பட்டு உள்ளதாக கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காலப்போக்கில் இந்த செய்தி மக்கள் மனதில் இருந்து நீங்கி விட்டது.
இப்படி இருக்க தற்பொழுது இமான் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் நடுவராக தனது கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகிறார். இப்படி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் மத்தியிலும் நடுவராகவும் இசைகளையும் வாசித்துக் கொண்டு, எப்பொழுதுமே பிசியாக இருந்து கொண்டிருக்கும், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், "எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஹேக்கர் எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும் மாற்றி இருக்கிறார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் எனது எக்ஸ் பக்கத்தில் பல பதிவுகளையும் பதிவிட்டு இருக்கிறார்கள். எனது கணக்கை விரைவில் மீட்டு தருமாறு எக்ஸ்த்தல நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருப்பதால் என்னை பின்தொடர்பவர்களுக்கான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது. தற்போது என்னுடைய எக்ஸ் பக்கத்தில் இருந்து ஏதாவது பதிவுகள் வந்தால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.
எக்ஸ் நிர்வாகம் உடனடியாக என்னுடைய கணக்கை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்களின் ஆதரவுக்கு நன்றி எனது கணக்கை திரும்ப பெற்றவுடன் உங்களுக்கு தகவலை தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.
இப்படி இருக்க, அவரது வாழ்க்கையில் பல சிக்கல்களை சுமந்து வரும் இமானின் எக்ஸ் தளம் மீட்கப்படுகிறதோ இல்லையோ அவரது சிறு வயதில் அவரது அம்மா அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் தற்பொழுது கிடைத்துள்ளது. இதனை பார்த்த, இமான் ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் இருக்கும் மகிழ்ச்சி இமானுக்கு இப்பொழுது இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்தாவது அவர் தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளட்டும் என்றும் "குழந்தையாகவே இருப்பது எவ்வளவு பாக்கியம்"என அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் வசூலை முறியடித்த சாவா திரைப்படம்...! பாராட்டு மழையில் ராஷ்மிகா...!