×
 

சிவகார்த்திகேயன் படத்தில் டூரிங் டாக்கீஸ் நடிகை..! படத்தில் நடித்ததை பெருமையாக பகிர்ந்து உற்சாகம்..!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தில் இணைந்து உள்ளார் டூரிங் டாக்கீஸ் மற்றும் விசுவாசம் நடிகை.

சிவகார்த்திகேயன் என்றாலே விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நிச்சல், ரெமோ, டாக்டர், அமரன் என பல வெற்றி படங்களை கொடுத்து மக்களின் கனவு நாயகனாக இருப்பவர் என்று பேசுபவர்கள் அதிகம். இப்படி அமரன் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் இரண்டு படங்கள் தற்பொழுது வெளியாக இருக்கிறது அதன்படி ஒன்று "மதராஸி" இரண்டாவது "பராசக்தி"

இப்படத்தை இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' போன்ற படங்களை இயக்கி மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளையும் சிவா பிறந்தநாள் அன்று வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார் கொங்கரா. சிவாவுடன் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படி இருக்க இப்படப்பிடிப்பு குறித்த அப்டேட்டுகள் வாரம் தவறாமல் வெளியாகி கொண்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: அழகோ அழகு அவள் கண் அழகு...! பிரியங்கா மோகனின் அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்..!

முதலில், நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று "பராசக்தி" படத்தை இயக்கி வரும் இயக்குநர் சுதா கொங்கரா, தனது எக்ஸ் தளத்தில், 'பராசக்தி' படப்பிடிப்புத் தளம், பட உருவாக்க வீடியோவை வெளியிட்டு, அதற்கு கீழ் "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீரோ. சினிமாவைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவது அதன் பயணம்தான். அந்த வகையில் உங்களோடு இணைந்து பயணித்து, பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியிருக்கிறது." என்று நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டு இருந்தார். 

அப்படி தனக்கு வாழ்த்து கூறிய படக்குழுவினருக்கு ரசிகர்களுக்கும் நன்றி கூறிய சிவா, பராசக்தி படக்குழுவினருக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக சிக்கன், மட்டன் என இரு பிரியாணிகளையும் தயார் செய்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார். அப்பொழுது இயக்குநர் சுதா கொங்கரா "என்னங்க சிவா சார் நமக்கு கொஞ்சம் பிரியாணி போடுறது என சொல்ல, உங்களுக்கு இல்லாததா" என பிரியாணியை அன்புடன் பரிமாறிய சிவகார்த்திகேயனின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. 

இதனை அடுத்து, மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன்பின் இலங்கையின் சிறந்த நடிகரான 'நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா' இந்த படத்தில் நடித்துள்ளார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் எழுந்தது. அதற்கு ஏற்றாற்போல் அவரும் பராசக்தி படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அப்பட காட்சிகளில் நடித்ததை போல சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். 

இதன் மத்தியில் பராசக்தி படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருந்த வேளையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டவுன் பிக்சர்ஸின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன், சமீபத்தில் பராசக்தி படத்தின் போஸ்டரை பதிவு செய்து அதன்கீழ் "This Pongal" என குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்க, அப்படத்தில் மேலும் ஒருவர் புதிதாக நடித்துவருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிங் டாக்கீஸ், ஓய், சக்க போடு போடு ராஜா, பைரவா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் "பாப்ரி கோஷ்". இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, பெங்காலி போன்ற மொழி படங்களில் நடித்து வருவதுடன் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த சூழலில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் இவர் இணைந்து நடித்ததற்கான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த பாப்ரி கோஷ், சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிங்க: பராசக்தி படத்தில் இணையும் மலையாள ஹீரோ.. படம் கலக்கலாக இருக்கும் போலயே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share