சமந்தா சென்ற சோலோ ட்ரிப்...! பெண் சிங்கம் சிங்கிளாக வலம் வந்த புகைப்படம்..!
நடிகை சமந்தா சிங்கிளாக ஒரு நாட்டையே சுற்றி பார்த்து மகிழ்ந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறி தற்பொழுது கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து அசத்தி வருகிறார் நடிகை சமந்தா. தனது திருமண பந்த பிரிவிற்கு பிறகு மிகவும் சோகமாக இருந்த சமந்தா பல நாட்கள் யாரிடமும் சரியாக பேசாமல், படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் அவரது எக்ஸ் கணவரான நாகசைதன்யா வேறொரு பெண்ணை திருமணம் செய்தததை அறிந்து,
எல்லோரும் அவரவர்கள் வாழக்கையை பார்க்கிறார்கள் நாமும் நம்முடைய வாழக்கையை பார்ப்போம் என மிண்டும் சினிமாவில் களமிறங்கி தற்பொழுது இயக்குநர் 'நந்தினி ரெட்டி' இயக்கும் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவதுடன் முற்றிலும் பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையான "பரதா" என்ற படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பல விமர்சன வலிகளுக்கு மத்தியில் மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்தாரா...!
இப்படி இருக்க, சமீபத்தில் சமந்தா விவாகரத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று காட்டுத்தீயார் இந்தியா முழுவதும் பரவியது. என்னவெனில், நாக சைதன்யா தரப்பினர் நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் இதனை வாங்க மறுத்த சமந்தா என்னால் உழைத்து முன்னேற முடியும். அதற்குண்டான திறமை என்னிடம் உள்ளது. உங்கள் பணத்தை நீங்களே வைத்துங்கள் என்று சொல்லி வந்துவிட்டாராம். இதனை கேட்டு ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி தள்ளினர்.
அதுமட்டுமல்லாமல், விவாகரத்திற்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அவரவர்கள் கைகளில் ஒரே மாதிரி டாட்டூ போட்டு இருந்தனர்.விவாகரத்துக்கு பிறகும் சமந்தா அந்த டாட்டூவை அப்படியே அழிக்காமல் தனது கைகளில் சுமந்து இருந்தார். ஆனால் தற்போது சமந்தா, கூடவே இல்லாத கணவரின் பெயர் கையில் எதற்கு என முடிவெடுத்து அதனையும் தனது கைகளில் இருந்து அளித்துள்ளார்.
மேலும், உற்றார் உறவினர்கள் உங்களை கைவிட்டாலும் நாங்கள் உங்களை என்றும் கைவிடமாட்டோம் என சமந்தா ரசிகர்கள் கூறிவந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் ஏறிய சமந்தா, ரசிகர்களின் வார்த்தையை நினைவுகூர்ந்து கண்கலங்கியபடி
"கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டான படங்களையும் கொடுக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்றும் எனக்குத் தெரியவில்லை" என பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து, தனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது என சமீபத்தில் சமந்தா கூற, உலகமே அந்த ஆசை என்ன? என உற்று நோக்கி கவனித்து கொண்டு இருந்தது. அப்பொழுது சமந்தா கூறுகையில், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் தனது கல்லூரி படிப்பை நான் முடித்தேன். ஆனால் அதற்கு பிறகு, சிட்னி பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது பெரிய கனவாக இருந்தது ஆனால் அந்த கனவு சில காரணங்களால் நிறைவேறாமல் போய்விட்டது" என்று தெரிவித்திருந்தார்.
இப்படி பல படங்களிலும் பல நிகழ்ச்சிகளிலும் தனி ஆளாக நின்று பேசி கலக்கி வரும் சமனதாவை பார்த்த பலரும் "பரவாயில்லையே சமந்தா நன்றாக பேசவும், வாழக்கையை வாழவும் கற்றுக்கொண்டுள்ளார்" என பேசி வரும் சூழலில், தற்பொழுது நாகசைதன்யா தனது மனைவியுடன் ஊர் சுற்றும்பொழுது நான் சுற்றமாட்டேனா என சிங்கிளாக டூருக்கு கிளம்பி இருக்கிறார் நடிகை சமந்தா.
அந்த வகையில் தற்பொழுது ஆஸ்திரேலியா கல்லூரி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சமந்தா அந்த நிகழ்ச்சிகளை முடித்த பின் அந்த நாட்டை சோலோவாக சுற்றி பார்த்து அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சும்மா.. கிரிக்கெட் வீரனாக நடிக்க முடியாது.. அதற்கும் பயிற்சி வேண்டும்..! டெஸ்ட் பட நடிகர் சித்தார்த் ஆவேசப் பேச்சு..!