மஞ்ச காட்டு மைனா "ஸ்னேகா" வடிவில் வந்து போனா...! ஒரே போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்..!
நடிகை சினேகாவின் மஞ்சள் நிற அழகு சேலை கட்டிய புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
"பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற பாடலையும் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" என்ற பாடலையும் இன்றளவு கேட்டாலும் உடனே நினைவுக்கு வருகிறவர் நடிகை ஸ்னேகா. ரம்பா 'தொடையழகி' என்றால் அப்பொழுதே 'சிரிப்பழகி' என்ற பட்டத்தை பெற்றவர் நடிகை ஸ்னேகா. குஷி படத்தில் எப்படி "அவ சிரிச்சா சிரிப்புல நூறு பேரு செத்து போயிட்டான்" என்ற பாடல் வரிகள் வருகிறதோ அந்த வரிகளுக்கு உண்மையான சொந்தக்காரர் தான் 'நடிகை ஸ்னேகா'. இப்படி படங்களிலும் நடனத்திலும் அசத்திய ஸ்னேகா தற்பொழுது டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக அசத்தி வருகிறார்.
நம் அனைவருக்கும் சினேகா என்று அறியப்படும் இவரது உண்மையான பெயர் "சுகாசினி இராசாராம் நாயுடு". இன்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்னேகாவின் ஆரம்ப திரையுலக வாழ்க்கை மலையாள படத்தில் தோன்றியது.
இதையும் படிங்க: படுஜோராக ரீரிலீஸ் ஆகிறது ஆட்டோகிராப்..! AI தொழில்நுட்பத்தில் ஜொலிக்கும் சினேகா, சேரன்..!
கடந்த 2001ம் ஆண்டு "இங்கே ஒரு நீலப்பக்சி" என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் குடும்ப பாங்கான இவரது முகத்தையும் நடிப்பையும் பார்த்து, 2001ம் ஆண்டு "என்னவளே" என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார்.
இதுவரை என்னவளே, பார்த்தாலே பரவசம், பம்மல் கே. சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, கிங், வசீகரா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஜனா, ஆட்டோகிராஃப், சின்னா, புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், நான் அவன் இல்லை, பிரிவோம் சந்திப்போம், இன்பா, பாண்டி, சிலம்பாட்டம், தீராத விளையாட்டுப் பிள்ளை, அங்காடித் தெரு, கோவா, ஒரு கல் ஒரு கண்ணாடி, முரட்டு காளை, ஹரிதாஸ், உன் சமையலறையில், ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, வேலைக்காரன், குருக்ஷேத்திரம், வினய விதேய ராமா, பட்டாஸ், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), வான், டிராகன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஸ்னேகா.
இப்படி 2000த்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த ஸ்னேகா 2025 வரையிலும் வருடம் தவறாமல் படத்தை நடித்து வந்தாலும், அனைவரது நினைவிலும் மிகவும் பிடித்த படம் என்றால் இவர் கமல்ஹாசனுடன் நடித்த "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் மற்றும் பம்மல் கே. சம்பந்தம்" இப்படங்களில் தனது நகைச்சுவை திறனை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார். இத்தனை படங்களை நடித்தது இருந்தாலும் இதுவரை ஒரு விருதுகளையும் வாங்காத ஸ்னேகா தனது திரையுலக வாழ்க்கையில் மக்களிடம் இருந்து நிறைய விருதுகளை அன்பால் பெற்று இருக்கிறார்.
மேலும், இதுவரை கல்ஹாசன்,விஜய், அஜித், சேரன், சீமான், அர்ஜுன், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த பெருமையுள்ள நடிகை ஸ்னேகா. தனது திருமணத்திற்கு பின் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்து கலக்கி வருகிறார்.
இப்படி வெள்ளித்திரையையும் சின்னத்திரையையும் கலக்கி வரும் நடிகை ஸ்னேகா, அழகான மஞ்சள் காட்டு மைனாவாக சேலையில் தனது அழகை போட்டோவாக எடுத்து இணையத்தில் பரவ செய்து இருக்கிறார். இப்புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஹோலியில் ஜாலி பண்ண ராசி கண்ணா...துள்ளி குதித்து குடும்பத்துடன் மகிழ்ச்சி..!