×
 

ஹோலியில் ஜாலி பண்ண ராசி கண்ணா...துள்ளி குதித்து குடும்பத்துடன் மகிழ்ச்சி..!

தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடி இருக்கிறார் ராசி கண்ணா.

பாலிஷ் போட்ட பளபளக்கும் பளிங்கு கல் போல முகத்தை உடையவர் தான் ராசி கண்ணா. பார்க்க அழகாக இருக்கும் இவர் உண்மையிலேயே குழந்தை உள்ளம் கொண்டவர் என்பது அவரது சிரிப்பில் தெரியும். கோபத்தில் உக்கிரமாய் இருப்பவர்கள் கூட இவரை கண்டால் குழந்தையாக மாறி விடுவார்கள்,

அந்த அளவிற்க்கு அவரது பேச்சு இருக்கும். என்னவென்றே தெரியவில்லை படம் சரியாக வசூல் ஆக மாட்டிக்கிறதே என வருத்தப்படும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ராசியாக வந்தவர் தான் ராசிக்கண்ணா. ஏனெனில் இவரது படத்தை பார்க்க கூட்டம் அப்படி அள்ளும். உதாரணமாக, அரண்மனை 4ல் "அச்சச்சோ" பாடலுக்காவே இவரை காண பல கோடி கூட்டங்கள் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: சலார் 2 வருவதில் புதிய சிக்கல்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபாஸ்..!

இப்படி இருக்கும் ராசி கண்ணா, 2015ம் ஆண்டு 'பெங்கால் டைகர்' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின் 2016ம் ஆண்டு "சுப்ரீம்" படத்திலும், 2017ம் ஆண்டு "ஜெய் லவ குசா" என்ற படத்திலும், 2018ம் ஆண்டு "தோலி ப்ரேமா" போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை ஈர்த்தார். இதனை அடுத்து ரவிமோகனுக்கு ஜோடியாக "அடங்க மறு" என்ற படத்தில் நடித்தார். 

அதன் பின், அயோத்தி, சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களை கவர்ந்த ராசி கண்ணா, தற்பொழுது சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் "யோதா" என்ற ஹிந்தி படத்திலும்  "தி சபர்மதி ரிப்போர்ட்" என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே "ருத்ரா" என்ற வெப் தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த ராசி கண்ணா அதற்கு பின்,  ஹிந்தி மொழியில் இருந்து 4 மொழிகளில் டப்பிங் செய்து அமேசான் பிரைமில் ரிலீசான "பார்ர்சி" என்ற வெப்சீரிஸ் நடித்து இருந்தார். இந்த தொடர் மெஹா ஹிட்டானது. 

இதனை தொடர்ந்து "விக்ராந்த் மாஸ்ஸியுடன் இணைந்து TME" என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள ராசி கண்ணா, சித்து ஜொன்னலகடாவுடன் "தெலுசு கட" என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கவுள்ளார். அதன் பின் தமிழில் ஜீவா மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் "மேதாவி" படத்தில் நடித்து வருகிறார். 

இப்படி பல படங்களில் நடித்தாலும் தனது குடும்பத்துடன் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் ராஷி தற்போது ஹோலி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

மேலும் ஹோலியில் குடும்பத்துடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை போட்டோ ஷூட்டாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது ஹோலி வாழ்த்துக்களை ராசி கண்ணாவுக்கு பகிர்ந்து வருகின்றனர். 
 
 

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம்.. கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கிய ஜியோ..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share