×
 

சிவகார்த்திகேயன் படத்தில் இலங்கை நடிகர்..! ஸ்ரீலங்காவை மிரளவைத்த சூட்டிங் புகைப்படம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படத்தில் ஸ்ரீலங்கா  நடிகர் நடிக்க இருக்கிறார். 

மெரினா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, வேலைக்காரன், அமரன் என பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். 

இப்படி இருக்க, முதலில் சிவகார்த்திகேயன் பிறந்தாள் அன்று, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியிடப்பட்டது. அதன்படி அப்படத்தின் பெயர் தமிழில் "மதராஸி" என்றும் இந்தியில் "தில் மதராஸி" என்றும் தெரியவந்தது.

இதையும் படிங்க: குழந்தையில் கியூட்டாக இருக்கும் டி.இமான்.. மழலை சிரிப்பில் இருக்கும் புகைப்படம் வைரல்..!

இதனை தொடர்ந்து, இப்படத்திற்கு 'மதராஸி' என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்றும் வட இந்திய மக்கள் தென் இந்திய மக்களை இன்றளவும் அழைக்கும் வார்த்தை 'மதராஸி' தான், ஆதலால் "மதராஸி" என்ற பெயர் வைக்கப்பட்டது என்றார். இதனால் இப்படத்திற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

இதனை அடுத்து ரசிகர்களின் காத்திருப்புக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' போன்ற படங்களை இயக்கி  மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்ட 'பராசக்தி' படத்தை இயக்கி வருவது அனைவருக்கும் தெரியும்.

இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளையும் சிவா பிறந்தநாள் அன்று வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார் கொங்கரா.இந்த நிலையில், சிவாவுடன்  இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கும் வேளையில் மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது.

இப்படி இருக்க அவரும் இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. 

எப்பொழுது படம் முடித்து வெளியிடுவார்கள் என காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அடுத்து அப்டேட் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் படக்குழுவினர். அதன்படி, இலங்கையின் சிறந்த நடிகர் என பெயரை கொண்ட, 'நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா' இந்த படத்தில் நடித்துள்ளார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இப்படி அனைவரும் பேச காரணம் என்னவெனில், அவர் பராசக்தி படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததுடன் அப்பட காட்சிகளில் நடித்ததை போல சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதோடு அவர் படக்குழுவினருடன் இருக்கும் ஒரு போட்டோவும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பராசக்தி படத்தில் இணையும் மலையாள ஹீரோ.. படம் கலக்கலாக இருக்கும் போலயே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share