நடிகை சித்ரா நினைவிருக்கா.. ஸ்ருதி நாராயணன் நிலைமையும் அப்படி தான் - சீரியல் நடிகை ரிஹானா காட்டம்..!
அந்தரங்க வீடியோ விவகாரத்தில் ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல சீரியல் நடிகை ரிஹானா.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இவரது அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் அவ்வப்போது வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த வீடியோக்களை வெளியிடுபவர்கள் யார் என இன்று வரை முழுமையாக அறியப்படவில்லை. இந்த சூழலில் நடிகை ஸ்ருதி நாராயணனின் முதல் வீடியோ வெளியான பொழுது முதலில் அவர் அது நான் இல்லை என மறுத்தார்.
அதற்காக அவர் போட்ட பதிவில், தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில், இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்தார் ஸ்ருதி.
இதையும் படிங்க: சினிமா துறையினரை கிழித்தெடுத்த சனம் ஷெட்டி.. பூதாகரமாக மாறும் சுருதி அந்தரங்க வீடியோ விவகாரம்..!
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏய் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என ஒரு அறிவியல் மேதாவி அப்பொழுதே கூறினார். இப்பொழுது கண்களுக்கு முன்பாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம் இனி என்ன நடக்குமோ என தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வந்தனர் ஆனால் அதற்குள்ளாக அடுத்ததடுத்து அவரது வீடியோக்கள் வெளியாகி வர சற்று மவுனம் காத்த ஸ்ருதி, மீண்டும் கோபத்தில் தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
அதில், "நானும் பெண் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் மோசமாக்குகிறீர்கள். இது ஒரு வீடியோ என பார்த்து அதனை காட்டுத்தீ போல பரப்பாதீர்கள்.
வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டை கீழே படித்து பார்த்தால் அனைவரும் என்னை தான் குறை சொல்கிறீர்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே என பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவுக்கு பின், ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவாக பாடகி சின்மயி, சனம் ஹெட்டி, மிர்னாலினி என பலபேர் தனககளது ஆதரவை கொடுத்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து தற்பொழுது சீரியல் நடிகை ரிஹானா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ருதிக்காக மனதுருகி பேசியுள்ளார். அதில், சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது, அதுல நடிக்கிறவங்கல யாராவது ஒருத்தவங்கள டார்கெட் பண்ணி வீடியோ எடுத்தா அது வைரல் ஆகும்.
ஸ்ருதி நாராயணனின் வீடியோ லீக் ஆகும் வரை ஸ்ருதி யார் என்று பலருக்கு தெரியாது. ஆனால் இன்றைக்கு ஸ்ருதி நாராயணன் யார் என்று அனைவருக்கும் தெரிகிறது. ஒரு சில பேர், விளம்பரத்திற்காக ஸ்ருதி நாராயணன் செய்த வேலை என்றும், அந்த பொண்ணுக்கு தெரியாமல் இந்த வீடியோ வெளியே வந்து இருக்காது எனறு சிலர் பேசுகிறார்கள்.
அது எப்படி, ஒரு பெண் மானத்தை வித்து அப்படி ஒரு வீடியோ போடுவாளா. அப்படியே வித்தாலும் உலகமே அவ உடம்ப பாக்குற மாதிரி செய்வாளா..? அப்படியே அவ செய்து இருந்தாலும், நான்கு செவுத்துக்குள்தானே பண்ணுவாங்க, உலகமே பார்க்கிற மாதிரி ஒரு பொண் பண்ணுவாளா? அந்த அளவுக்கு மோசமா போயிடுச்சா பெண்களோட மானம், மரியாதை எல்லாமே.
இப்படி மனசாட்சியே இல்லாம வீடியோவை வெளியிட்டானே அந்த ஆளு, அவனை யாராவது கேள்வி கேட்டீங்களா? அந்த ஆளை இதுவரைக்கும் பிடிக்க முடியல, அவனை பிடிச்சி சரியான தண்டனை கொடுத்தாத்தான் இனிவரும் காலத்தில் இதுபோன்று எதுவும் நடக்காது. ஸ்ருதி அந்த வீடியோ AIனு சொல்லி இருக்கிறாள். அது AI வீடியோவாக இல்லாமல்கூட இருக்கட்டும், ஒரு ஆணை நம்பி காட்டிய பிறகு எப்படி அவன் அந்த வீடியோவை வெளியிட்டான். அவன் எல்லாம் ஒரு ஆம்பளையா?
இதே போலத்தான் நடிகை சித்ராவிற்கும் நடந்தது, கடைசியில் அதை தற்கொலை என்று சொல்லி விட்டார்கள். இதெல்லாம் நான் சொல்வதற்கு முக்கிய காரணம், பொண்ணுங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்கணும், ஆடை சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு, அவுத்து போட்டு நடப்பேன், நான் வெளியே தொடையை காண்பிப்பேன். ஆனா, எவனும் என்னை பார்க்க கூடாது, சீண்டக்கூடாது, என்னை கிண்டல் பண்ணக்கூடாது.
ஏன்னா இது சுதந்திர நாடு இதுல வந்து பெண்களை எது வேணாலும் பண்ணலாம், சரிக்கு சமம் என்று, வாய்வுக்கு வந்தபடி பேசுவது சரியில்லை. இது உங்களை மட்டும் பாதிக்காது உங்க குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என காட்டமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: படம் வெறித்தனமா இருக்கு.. முதல் ரிவியூவில் பாசிட்டிவ் கமெண்ட் வாங்கிய "குட் பேட் அக்லி"...!