இப்படி அப்பட்டமா உடம்ப காண்பிக்க வேண்டுமா..? வீடியோவில் இருப்பது ஸ்ருதி தான் - ஷகிலா காட்டம்..!
அந்தரங்க வீடியோவில் இருப்பது ஏஐ கிடையாது அது ஸ்ருதி தான் என காட்டமாக பேசி இருக்கிறார் நடிகை ஷகிலா.
அந்தரங்க வீடியோ விவகாரத்தில் சிக்கி தவிக்கும் பிரபல நடிகை ஸ்ருதி நாராயணன் பற்றி பல அவதூறான கருத்துக்களும் அவருக்கு ஆதரவான பல கருத்துக்களும் முன் வைக்கப்பட்டு வருகிறது. அவரது அந்தரங்க விடியோவை பார்த்து லிங்க் கேட்கும் ஆண்மகன்களே..! நீங்கள் எல்லாம் நாசமா போங்க... ஒழிந்து போங்க என முதலில் ஸ்ருதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பாடகி சின்மயி, அவரை தொடர்ந்து, பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி, திரைத்துறையில் உள்ள பெரியவர்களே.. உங்கள் துறை நாறிப்போய் இருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமா துறை உள்ளது என கூறியிருந்தார். பின் பிரபல சீரியல் நடிகை ரிஹானா, முதலில் நடிகை சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இந்த பெண்ணுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. அதைவிட இந்த காலத்து பெண்கள் ஆண்களிடம் சிக்குவதை பிரதான வேலையாக வைத்து உள்ளனர் என கடுமையாக சாடினர்.
இப்படி இருக்க, நடிகை ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ தொடர்பாக இரண்டு பதிவுகளை ஏற்கனவே பகிர்ந்திருந்தார். அதில் முதலாவதாக, தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில், இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்தார் ஸ்ருதி. இதனை பார்த்து பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க: சினிமா துறையினரை கிழித்தெடுத்த சனம் ஷெட்டி.. பூதாகரமாக மாறும் சுருதி அந்தரங்க வீடியோ விவகாரம்..!
பின்னர், அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாக, நெட்டிசன்கள் பலர் அவருடைய இன்ஸ்ட்டா பகுதிக்கு சென்று வீடியோ லிங்க் வேண்டும் என கமெண்ட் வாயிலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து கோபமான ஸ்ருதி, தனது ஸ்டோரி வாயிலாக இரண்டாவது பதிவை போட்டார். அதில், "நானும் பெண் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் மோசமாக்குகிறீர்கள். இது ஒரு வீடியோ என பார்த்து அதனை காட்டுத்தீ போல பரப்பாதீர்கள்.
வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டை கீழே படித்து பார்த்தால் அனைவரும் என்னை தான் குறை சொல்கிறீர்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே என பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், யார் வெளியிட்டது என சொல்லுங்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என பதிவிட, இதுவரை மவுனம் காத்துவருகிறார் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்த நிலையில் தவறுகள் அனைத்தும் ஸ்ருதி மீது தான் உள்ளது என பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார் நடிகை ஷகிலா. பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஷகிலா, "நான் ஸ்ருதி நாராயணனின் வீடியோவை முதலில் பார்க்கவில்லை ஆதலால் அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து வந்தேன்.
ஆனால் அந்த வீடியோவை நான் முழுமையாக பார்த்த பிறகு தான் எனக்கு விளங்கியது அந்தப் பெண் செய்தது தான் மிகப்பெரிய தவறு என்று. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கட்டும் அதற்காக இப்படியா செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் பேசுவது இரண்டு ஆண்கள் இல்லை ஒரே ஒருவன் தான்.
மேலும், இதுபோன்ற ஆடிஷன் எல்லாம் சினிமாவில் நடக்கவே நடக்காது. அதுலயும் அந்த வீடியோவில் அந்த பெண் எங்கே நடித்து இருக்கிறார்கள் சொல்லுங்கள். இதற்கு பெயர் ஆடிஷனா...? முதலில் அந்த பெண் வீடியோவில் இருப்பது நான் இல்லை, 'ஏஐ' என்று சொன்னார். ஆனால், அது 'ஏஐ' அல்ல.. அந்த பெண் தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அந்த வீடியோ எடுக்கும் போது, அவருக்கு போன் வருகிறது. அதை அவர் கட் செய்கிறார்.
இதனால், அது ஏஐ என கூறி தப்பிக்க முடியாது, அந்த நிர்வாண வீடியோவில் இருப்பது அந்த நடிகை தான். இல்லை தெரியாமல் கேட்கிறேன், இப்படி கேவலமானதை செய்து தான் படவாய்ப்பை பெற வேண்டுமா...? இவ்வளவு நடந்த பிறகும், அந்த பெண் வீடியோவை வெளியிட்ட ஆணின் பெயரை ஏன் வெளியில் சொல்லவில்லை? அந்த வீடியோவை எடுக்கும் ஆண், ஏற்கனவே யாரிடமாவது செக்ஸ் வைத்து இருக்கிறீர்களா என்று கேட்ட போது, அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று சொல்லும் அந்த நடிகை, தன்னுடைய உடம்பை இப்படி அப்பட்டமாக காட்ட வேண்டுமா சொல்லுங்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு என்ன நடக்கிறது என்று அந்த பெண்ணுக்கு நன்றாக தெரிந்த பின் தான் அனைத்தும் நடந்து இருக்கிறது. ஆனால், இந்த வீடியோவை வெளியிட்டவனை சும்மாவிடக்கூடாது, அதற்காக அந்த நடிகை செய்ததும் சரி என்று சொல்லவில்லை. இந்த விஷயத்தில் அந்தப் பெண் இதுவரைக்கும் காவல் நிலையத்தில் புகாரே கொடுக்கவில்லை. அவர் புகார் அளிக்கும்போது தான் யார் மீது தவறு இருக்கிறது, யாரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்... பின் யாரை பெயிலில் வெளியே விட வேண்டும் என்றெல்லாம் முடிவு எடுக்க முடியும்" என காட்டமாக தெரிவித்து இருக்கிறார் ஷகிலா.
இதையும் படிங்க: சீரியல் நடிகை வீடியோ லீக் விவகாரம்... நெத்தியடி அடித்த மருத்துவர்!!