ராஜமௌலியை கடுப்பாக்கிய வீடியோ.. கொதித்துப்போன மகேஷ் பாபு.. யார் பார்த்த வேலை என விசாரணை...!
படப்பிடிப்பில் கவனமாக இருக்கும் ராஜமௌலியையே கடுப்பாக செய்து உள்ளார் ஒருவர்.
தமிழ் திரையுலகில் பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குனர் என சங்கரையும் அட்லீயையும் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு இருவரும் ஃபேமஸ். அதே போல் தற்பொழுது மிகவும் ஃபேமஸானா இயக்குநர் யார் என கேட்டால் அனைவரும் கூறுவது ராஜமௌலி. இதுவரை இவர் இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, சை, விக்ரமார்க்டு, எமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா, ஈகா, சத்ரபதி, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய 12 படங்களும் மெஹாஹிட் கொடுத்துள்ளது. அந்த அளவிற்கு இவரது கற்பனை திறன் மற்றும் இயக்கும் விதம் ஆகியவை இன்று ராஜமௌலியை உலகில் தலைசிறந்த இயக்குநர்களின் வரிசையில் அமர வைத்துள்ளது.
இப்படி இருக்க, ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் தமிழில் மட்டும் அல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் பாகுபலியாக பிரபாஸும், தேவசேனையாக அனுஷ்காவும், ராஜமாதாவாக ரம்யாகிருஷ்ணனும் அவருக்கு கணவராக நாசரும், அடிமை கட்டப்பனாக சாத்தியராஜும் இன்னும் பல பிரபலங்களும் நடித்து அசத்தி இருந்தனர். இப்படி ஒரு பிரமாண்ட படைப்பா, கொஞ்சம் கூட கிராபிக்ஸ் காட்சிகள் தெரியாத வண்ணம் எடுத்து உள்ளார் ராஜமௌலி, என அனைவரையும் வாய்பிளக்க வைத்தது.
இதையும் படிங்க: நடிகர் மகேஷ் பாபுவுக்கு கோரிக்கை வைத்த அஷ்வின் மாரிமுத்து... அடுத்து அவருடன் படமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!
இதனை தொடர்ந்து, ராஜமௌலி இயக்கிய, ஆர்ஆர்ஆர் சுருக்கமாக கூற வேண்டுமானால் "ட்ரிபிள் ஆர்" திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தினை தொடர்ந்து, இயக்குநர் ராஜமௌலி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை வைத்து 'SSMB29' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்காக நடிகர் மகேஷ் பாபு நீளமான முடியை வளர்த்து உள்ளார். சமீபத்தில் மகேஷ் பாபு கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில், ஒரு பெண் அவரது முடியை தொட்டு பார்த்து இவ்வளவு நீளமான முடியா என கேட்க, அவரை பார்த்து மகேஷ் பாபு சிரித்து விட்டு சென்றார். இந்த காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.
இதனால், இப்படத்தின் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு பெருகியிருப்பதால், இயக்குநர் ராஜமௌலி வழக்கம்போல் படப்பிடிப்பை ரகசியமாக நடத்தி வருகிறார். குறிப்பாக "SSMB29" படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் 15 நாட்கள் நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த சூழலில், இப்படத்தின் நடன காட்சிகளை பதிவு செய்ய 15 நாட்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் பழங்குடியினத்தவர்கள் நடனம் ஆடுவதை போன்று ராஜமௌலி சித்தரித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், SSMB29 படத்தில் மகேஷ் பாபு நடிக்கும் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மகேஷ் பாபுவை கோபப்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த சண்டை காட்சியில், முதலில் மகேஷ் பாபுவை ஒருவர் தள்ளிவிட்டு மற்றொருவர் காலில் விழ சொல்ல, அவரும் மண்டியிடுகிறார். இதனை காரில் இருக்கும் இருவர் ஏளனமாக பார்ப்பது போன்றும் உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது புரட்சி படமாக தான் இருக்கும் என கூறி அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இதை பார்த்த ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் அப்செட்டில் இருக்கின்றனர். மேலும் இந்த காட்சிகளை யார் லீக் செய்தது என விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய அஞ்சல் துறை 'அப்பு'வை கௌரவிக்கிறது..! மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு மரியாதை..!