×
 

ரெட்ரோ படம் குறித்து சூர்யா சொன்ன அந்த வார்த்தை..! நெகிழ்ச்சி பொங்க பேசிய கார்த்திக் சுப்புராஜ்..!

நான் நினைத்ததை விட சூர்யா அருமையான மனிதர் என புகழாரம் சுட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

படங்கள் என்றால் வெறித்தனமாக எடுக்க நினைக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பது கூடுதல் ட்ரீட்டாக உள்ளது. ஏற்கனவே, ரெட்ரோ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மே மாதம் 1ம் தேதி படம் வெளியாகும் என்ற அப்டேட்டை Ghibli ஸ்டைலில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இருவரும் வீடியோவாக சமீபத்தில் கொடுத்தனர்.

அந்த அப்டேட் வீடியோவில், சூர்யா பேசும்போது, " ரெட்ரோ டப்பிங் முடுஞ்சுது, கட்...அண்ட்...ரைட்டு" என பேசுகிறார். அதற்கு பின்னர் டப்பிங்கின் போது சூர்யாவுக்கு அருகில் கார்த்திக் சுப்புராஜ் நின்று கொண்டு இருக்கிறார். இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை Ghibli ஸ்டைலில் மாற்றி அசத்தியிருந்தனர். 

இதையும் படிங்க: ரெட்ரோ ஆக்ஷன் படம் அல்ல... யாரும் பார்க்காத காதல் படம்..! உண்மையை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்..!

இதனை அடுத்து, படத்தின் கதையை குறித்து சமீபத்தில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், 'ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு 'காதல் கதை' என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம். இது நீங்கள் நினைப்பதை போல் கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆதலால் இப்படத்தில் ஆக்ஷனும் உண்டு, மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு. மேலும், ரெட்ரோ படத்தில் சூர்யா, "பாரிவேல் கண்ணன்" என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருவார். படத்தில் கோபம், அடிதடி என்று வாழ்ந்து, தனக்கான இலக்கு என்ன என்று தெரியாமல் ஓடும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் அன்பாலே அவன் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்வதும், அந்தப் பெண்ணுக்காக வரும் பெரிய பிரச்சனையை தீர்த்து வைப்பதுமான மிரளவைக்கும் கதை. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி. படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது.

தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஆளே இல்லா தனி தீவில் தான் இந்த காட்சிகளை படம் ஆக்கினோம். ஒரு சில படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்தது. மேலும், இந்த படம் நிச்சயமாக நான் இதுவரை எடுத்த கதைகளை போல் அல்லாமலும், சூர்யாவின் நடிப்பில் மக்கள் பார்க்காத முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் இருக்கும் என்றார்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது நடிகர் சூர்யாவை குறித்து பல சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர். அதில், "சூர்யா சார் ரெட்ரோ திரைப்படத்தில் கதைகளை மாற்ற சொன்னாரா... அல்லது படத்தில் காட்சிகள் சரியில்லை மாற்றுங்கள் என கூறினாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ், "சூர்யா சார் ரெட்ரோ கதையை படித்துவிட்டு படத்தின் கதாநாயகனின் கதாப்பாத்திரம் மிகவும் ஹீரோத்தனமாக இருக்கிறது. நிஜ உலகத்தில் இருந்து மாறுப்பட்டு தோன்றுகிறது.

அதை மிகவும் நம்பகத்தன்மையோடு மாற்றுங்கள் என கூறினார். இந்த வார்த்தையை கேட்டு நான் மிகவும் ஷாக் ஆனேன். காரணம், படங்களில் தன்னை மிகவும் மாஸாக நிறைய பில்ட் அப் காட்சிகளை வைத்து காண்பிக்க வேண்டும் என சொல்லும் நடிகர்களின் மத்தியில் சூர்யா சார் இப்படி சொன்னது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவர் சொன்ன வார்த்தை தான் இந்த கதையின் மாற்றத்திற்கு மிகவும் உதவியது" என கூறினார்.

மேலும், ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் நடைப்பெறம் எனவும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்யா கொடுத்த Ghibli ஸ்டைல் அப்டேட்..! வெறித்தனமாக களமிறங்கும் "ரெட்ரோ"...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share