ராசிகண்ணாவை தொடர்ந்து ஹோலி கொண்டாடிய தனுஷ்..! ஆனா அவருடன் இருக்கும் பொண்ணு யாரு..?
சக நடிகர்களை போல நடிகர் தனுஷும் ஹோலி கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.
இந்திய திரையுலகில் பல நடிகர்கள் இருந்தாலும், இன்றும் தனியாக தெரிந்தவர் நடிகர் தனுஷ் தான். இவருக்கு என்ன தான் திறமை இல்லை என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு இன்று அவரது வாழ்க்கை மாறியுள்ளது எனலாம். அப்படிப்பட்ட இவரது இயற்பெயர் என்ன என்று கேட்டால் "வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா" என்று கூறுவர். இதுமட்டுமல்லாமல் இவரை "இந்தியன் புரூஸ் லீ" என்று பலரும் அழைக்கின்றனர். அந்த அளவிற்கு தற்பொழுது அவரது உடலை செதுக்கி சீஃஸ் பேக் வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தனுஷ், தற்பொழுது கோலிவுட், பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இப்படி, இன்று உலகையே தனது திறமையால் கையுக்குள் வைத்து கலக்கி வரும் தனுஷின் ஆரம்ப வாழ்க்கையில் அவருக்கு அச்சாணியாக இருந்த முதல் படம் 2002-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படம் தான்.
ஆனால் முதலில் நடிகர் தனுஷை யாரும் நடிகராக ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக நிறைய அவமானங்களை சுமந்தார். இந்த சூழலில் தனக்கு வந்த கேலி கிண்டல்களை பொருட்படுத்தாமல் திருடா திருடி, திருவிளையாடல், பொல்லாதவன், படிக்காதவன், வேங்கை, வேலையில்லா பட்டதாரி, த்ரீ, மாரி, ராயன் என வரிசையாக பல படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை திரையுலகில் பிடித்தார்.
இதையும் படிங்க: நயன்தாராவின் நிம்மதியை கேஸ் போட்டு கெடுத்த தனுஷ்.. இவர்கள் ஈகோ சண்டையில் பாவமாக சிக்கிய நெட்பிளிக்ஸ்..!
இப்படி, பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறிய தனுஷை "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்தின் மூத்த மகளான "ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்து உள்ளனர்.
மேலும் தனுஷின் பெற்றோர்கள் என ஒரு தம்பதி வந்து அவரை பாடாய்ப்படுத்தினர். இத்தனை வலிகளையும் தாங்கி கொண்ட தனுஷ் தனது கெரியரில் முழு கவனம் செலுத்தி தற்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னாவை வைத்து அவர் இயக்கியிருந்த 'பவர் பாண்டி' திரைப்படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்தார். ஆனால் அப்படம் தோல்வியை சந்தித்தது.
இந்த சூழலில், அவ்வளவுதான் தனுஷ் என அனைவரும் கூறிய நிலையில், தற்பொழுது அவர் தயாரிப்பில் வெளியான neek திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இந்த நிலையில்,"இட்லி கடை" என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் நடிப்பில் "குபேரா" என்ற திரைப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி வெளிவர உள்ளது.
இதற்கிடையே பாலிவுட்டிலும் "தேரே இஷ்க் மெயின்" என்ற படத்தில் நடிகை கீர்த்தி சனோனுடன் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சூட்டிங் ஸ்பார்ட்டில் அனைவரும் ஹோலி கொண்டாடி உள்ளனர். அப்போது அங்கு இருந்த ஆனந்த் எல்.ராய், கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோரும் ஒன்றாக ஹோலி கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நயன் – தனுஷ் இடையே தொடரும் சர்ச்சை… இறுதி தீர்ப்பு எப்போ தெரியுமா?