"நிக்க தேவை பூமாதா.. நாம வாழ தேவ கோமாதா".. தமன்னாவின் டையலாக்கில் மிரட்டும் ஓடேலா-2..!
நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம் என மிரட்டும் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளனர் ஓடேலா-2 படக்குழுவினர்.
நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான "அருந்ததி" படத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதில் வில்லன் "அடியே அருந்ததி உன் ரத்தத்தை குடிப்பேன்" என சவப்பெட்டியில் இருந்து கத்த, அருந்ததியான அனுஷ்கா "உன்னால அந்த சமாதியில் இருந்து வெளியே வர முடியாதுடா வரவும் விடமாட்டேன்" என கூறி இருவரும் மாறி மாறி சவால் விடுவர்.
இறுதியாக யாரும் ஜெயிக்க முடியாத அகோரியான வில்லனை அழிக்க தன்னை அழித்து அதிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பை ஆயுதமாக மாற்றி, மறுஜென்மத்தில் வந்து வில்லனை அழிப்பார் அருந்ததி. குறிப்பாக இப்படத்தில் வரும் "ஜக்கம்மா தாயம்மா" பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் அதிகம்.
இப்படி அனைவரையும் கதிகலங்க வைத்த அருந்ததி படத்தை இந்த கால தொழில்நுட்பத்தில் மாற்றி ஒடெலா 2 என்ற பெயரில் வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில் அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் 2022ல் வெளியான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதை தான் "ஒடெலா 2".
ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சித்தரிக்க கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் அன்று வாரணாசியில் தொடங்கிய நிலையில் தற்பொழுது படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்காக காத்திருந்தது.
இதையும் படிங்க: தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்ட விஜய் வர்மா...! சூசகமாக காதல் பிரிவை அறிவித்து வருத்தம்..!
இதனை அடுத்து, பிப்ரவரி 22ம் தேதி கும்பமேளாவில் இப்படத்திற்கான டீசர் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். அதே போல் அன்று இப்படத்திற்கான டீசர் வெளியாகி பயங்கர புயலை கிளப்பியது. யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி ஆகியோருடன் தமன்னா பாட்டியா, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோர் பார்க்கவே பயங்கரமாக நடித்திருப்பது டீசரை பார்த்தாலே தெரிந்தது.
பார்க்கவே பக்தி மையமாகவும், மந்திரவாதிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கும் மரணத்தை கண்களுக்கு முன்பாக காட்டும் அளவிற்கான தோற்றத்தில் தமன்னாவின் ஒடெலா 2 டீசர் இருக்க, அதன் ட்ரெய்லர் மற்றும் வெளியிட்டு தேதியை எப்பொழுது வெளியிடுவீர்கள் என ரசிகர்கள் கேட்டு கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லரில் இடம் பெற்றுள்ள 'நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆன்மிக சாயல் போர்த்திய படமாக இப்படம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
இந்த சூழலில், ஒடேலா 2 படம் வெற்றி அடைய வேண்டும் என்பதறகாக மும்பையில் உள்ள 'பாபுல்நாத் சிவன் கோயிலில்' சாமி தரிசனம் செய்திருக்கிறார் நடிகை தமன்னா.
இதையும் படிங்க: காதல் தந்த வலிகளை மறக்க.. பஞ்சுமிட்டாய் சேலையில் வலம் வரும் தமன்னா பாட்டியா..!