×
 

காஷ்மீர் பிரச்சனையை இலங்கையுடன் ஒப்பிட்டு பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல்..! 

காஷ்மீர் மற்றும் இலங்கை பிரச்சனையை சசிகுமார் படத்தை வைத்து இயக்குநர் டி.ஜே.ஞானவேல் கூறியுள்ளார். 

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இப்படத்தில், சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, பலே வெள்ளையத் தேவா, கிடாரி, வெற்றிவேல், கொடிவீரன், அசுரவதம், அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா, கென்னடி கிளப், பேட்ட, நாடோடிகள் 2, உடன்பிறப்பே, முந்தானை முடிச்சு, எம் ஜி ஆர் மகன், ராஜ வம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, காரி, நான் மிருகமாய் மாற, அயோத்தி, நா நா, நந்தன், கருடன் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்த இயக்குனரும் நடிகருமான சசிகுமாரும். 

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சை பதிவு..! விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆன விஜய் ஆண்டனி..!

ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், அவள் வருவாளா, கொண்டாட்டம், நட்புக்காக, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, உன்னை கொடு என்னை தருவேன், பிரியமானவளே, 12 B, பார்த்தாலே பரவசம் , பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டாள், யூத், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, பிதாமகன், நியூ, ஆய்த எழுத்து, நம் நாடு, சத்தம் போடாதே, சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை, தநா -07 அல 4777, பேட்ட, பாவ கதைகள், மகான், ராக்கெட்ரி: நம்பி விளைவு, கேப்டன், அந்தகன், குட் பேட் அக்லி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சிம்ரனும் இணைந்து நடித்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. 

மேலும், "இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை கூறுவேன் என்றும் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக இலங்கை தமிழர்களின் பாடுகள் என்ன என்பது அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும் என சமுத்திரக்கனியும், "டூரிஸ்ட் ஃபேமிலி" படம் என்னை மிகவும் ஈர்த்தது, மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது.

சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. குறிப்பாக இப்படத்தின் இயக்குனர் யாரிடமும் உதவி இயக்குனராக பனி புரியாமல் இப்படி பட்ட அருமையான படத்தை எடுத்தது என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ்குமரன் தெரிவித்துள்ளார். 

இப்படி இருக்க, மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை குறித்து பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல், "போர் என்பது அடிப்படையிலேயே மனிதத் தன்மையற்றது. அது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது. அதேபோல் போருக்கான அடிப்படை விதிமுறைகள் உள்ளது அதனை யாரும் மீறக்கூடாது. ஒரு போர் ஆரம்பமாக உள்ளது என்றால் அதற்கு முன்பதாக பெண்கள், நோயாளிகள், கால்நடைகள், குழந்தைகள் என அனைவரையும் அப்புறப்படுத்திய பின் தான் போரை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தான் சுற்றுலா தளத்தில் சரியான பாதுகாப்பில்லை, மருத்துவத்துக்காக வந்த பாகிஸ்தானிய குழந்தையை 48 மணி நேரத்தில் வெளியேற்ற வேண்டும் என்ற துரதிஷ்டமான நிகழ்வுகளும் அதில் வருகிறது. உண்மையில் போரால் நன்மைகள் கிடையாது. போரால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான பாதிப்புகள் அதிகமாகும். இப்படிப்பட்ட போரால் ஏற்படும் வலிகளை குறித்தும் பாடுகள் குறித்தும் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் சொன்னாலும் நகைச்சுவையாகவே இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நான் பத்திரிக்கையாளராக இருந்த பொழுது இலங்கை தமிழர்கள் குறித்து பேசியவைகளை நினைவு கூர்ந்து பார்க்கிறேன் என த.செ.ஞானவேல் கூறினார்.


 

இதையும் படிங்க: ஒன்னு இல்ல இரண்டு இல்ல 24 குழந்தைகள் பெத்துக்கனும்...! அதுதான் என் ஆசை.. நடிகை ரோஜா ஓபன் டாக்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share