×
 

பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சை பதிவு..! விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆன விஜய் ஆண்டனி..!

விஜய் ஆண்டனியின் பதிவு சர்ச்சையான நிலையில் அதற்க்கான விளக்கத்தை கொடுத்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். இவரது நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் ஒருவித கருத்தை முன்வைத்ததாக இருக்கும். அதனாலேயே இவரது படங்களை பார்க்க ஒரு கூட்டம் ஆவலாகவே உள்ளது. படத்தில் எப்படி கலக்குவாரோ அதே போல் பாடுவதிலும் பாடலை உருவாக்குவதிலும் வல்லவர் என்றே சொல்லலாம். இவரது இசையமைப்பில் வந்த "இடிச்ச பச்சரிசி, நாக்க முக்க, உசுமுலாரசே" போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனிதில் நீங்கா இடம் பிடித்த பாடலாக உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் இதுவறை விஜய் ஆண்டனி படங்கள் என பார்த்தால் சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, எமன், காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், கொலை, பிச்சைக்காரன் 2, தமிழரசன், ரத்தம், ஹிட்லர், ரோமியோ, வள்ளி மயில், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது பாடலில் எப்படி வித்தியாசங்கள் உள்ளதோ அதே போல் இவரது படத்தின் டைட்டில்களும் வித்தியாசமானவையே.

இவர் படத்தில் நடிப்பதிலும், இசையமைப்பதிலும், தயாரிப்பதிலும், எடிட் செய்வதிலும் எந்த அளவிற்கு ஃபேமஸோ அதே அளவிற்கு அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவதிலும் ஃபேமஸ். பின்பு அதற்கு விளக்கம் கொடுப்பதிலும் ஃபேமஸ். இப்படி இருக்க அவர் பதிவிட்ட ஒரு பதிவு தற்பொழுது பூதாகாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெறுப்பு வேண்டாம் மனிதநேயம் போதும்..! இந்தியா-பாகிஸ்தான் மக்களுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு..!

அந்த வகையில், காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பலதரப்பட்ட மக்களும், பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நேற்று விஜய் ஆண்டனியும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். 

அதில், "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல தான், அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். எனவே, வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்." என தெரிவித்து இருந்தார். 

இந்த பதிவை பார்த்த பலரும் விஜய் ஆண்டனி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார் என கூற, இது தற்பொழுது சர்சையாக மாறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ந்து போன விஜய் ஆண்டனி தனது பதிவை குறித்து தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார். அதில், என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு என்று குறிப்பிட்டு, "காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும் நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்" என்று அந்த பதிவில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். 

இதையும் படிங்க: வெறுப்பு வேண்டாம் மனிதநேயம் போதும்..! இந்தியா-பாகிஸ்தான் மக்களுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share