×
 

இளம் நடிகையை திருமணம் செய்த எஸ்.வி.சேகர்..! கண்ணீர் விட்டு கதறும் நெட்டிசன்கள்..!

 பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்தார் நடிகர் எஸ்.வி.சேகர்.

நாடக பின்னணியில் இருந்து சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்தவர் தான் எஸ்.வி.சேகர். இவர் 'மைலாப்பூர் பாய்ஸ்' என்ற நாடக கம்பெனியின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டு அதன் பின் தனக்காக உருவாக்கிய நாடக கம்பெனி தான் "நாடகப் பிரியா". இந்த குழுவை தொடங்கி சுமார் 24 நாடகங்களை அரங்கேற்றினார்.

1974 காலகட்டத்திலேயே இவரது நாடகக் குழு, ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என உலகம் முழுவதும் தங்களது நிகழ்ச்சிகளை நடத்தியது. இதனை அடுத்து, "நினைத்தாலே இனிக்கும்" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கிய இவரது பயணம் இன்றும் நீடித்து கொண்டு இருக்கிறது.

இவரது பல வருட உழைப்புக்கு பலனாக, 'இயல் இசை நாடக மன்றத்தின் கலை மாமணி விருது' மற்றும் 'சிறந்த நாடகக் குழு' விருது முதலில் இவருக்கு கிடைத்தது. அதன்பின், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரதாரர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கமான RAPA விலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக "சிறந்த அகில இந்திய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் விருதையும்", மைலாப்பூர் அகாடமி, நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் என பல பிரபலங்களிடம் இருந்தும் 'சிறந்த நகைச்சுவை நடிகர்' என்ற பட்டத்தையும் பாராட்டையும் பெற்றார். மேலும், தமிழகத்தின் உயரிய கலைவாணர் விருதையும் பெற்றுள்ளார். 

இதையும் படிங்க: மோடி ஆதரவாளருடன் படம் நடிக்க மறுத்த சித்தார்த்..! நஷ்ட ஈடு கேட்டு எஸ்.வி சேகர் ஆதங்கம்..!

இதுவரை சேகர் இயக்கிய நாடகங்கள் என பார்த்தால் அவன் ஒரு தனி மரம், கண்ணமூச்சி, திரும்பி வந்த மனைவி, பாலவாக்கத்தில் பைத்தியக்காரத் திருடர்கள், குத்தகைதாரர் கட்டளைகள், மேலும் ஒரு எக்ஸார்சிஸ்ட், மகாபாரதத்தில் மங்காதா, சாத்தல் இல்லயேல் காதல், காதுலா பூ, காட்டுல மழை, 1000 உதய் வாங்கிய அபூர்வ சிகாமணி, வால் பையன், எல்லாமே தமாஷ்தான், எல்லாரும் வாங்கா, அதிர்ஷ்டக்காரன், யாமிருக்க பயம் யேயன்?, பெரிய தம்பி, ஹைதராபாத்தில் சின்ன மாப்ளே பெரிய மாப்ளே/ஹனிமூன், எப்பவும் நீ ராஜா, தத்து பிள்ளை, அல்வா, பெரியப்பா, குழந்தைசாமி, மெகா வசூல் உள்ளிட்டவையே.

இதனை தொடர்ந்து இதுவரை இவர் நடித்த படங்கள் என பார்த்தால், நினைத்தாலே இனிக்கும், அந்தமைனா அனுபவம், வருமையின் நிறம் சிவப்பு, ஆகலி ராஜ்யம், சுமாய், பட்டம் பரகட்டும், குடும்பம் ஒரு கதம்பம், பயணங்கள் முடிவதில்லை, தாம்பாத்தியம் ஒரு சங்கீதம், சிம்லா ஸ்பெஷல், மணல் கயிறு, ஸ்பரிசம், மருமகளே வாழ்க்கை, கோபுரங்கள் சைவதில்லை, அதிசயப்பிரவிகள், உருவங்கள் மாறலம், வரதட்சணை கல்யாணம், சீரும் சிங்கங்கள், சுபமுஹூர்த்தம், பிரம்மச்சாரிகள், ஒரு புல்லாங்குழல் அடுத்துள்ளது, தூங்காத கன்னிண்ட்ரு ஒன்று,     ஊருக்கு உபதேசம், ராஜா வீட்டு கண்ணுக்குட்டி, பொண்டாட்டி பொண்டாட்டிதான், பொண்டாட்டியே தெய்வம், ஜீன்ஸ், கல்யாண கலாட்டா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, டிராஃபிக் ராமசாமி என பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளங்களை வைத்து இருக்கிறார். 

இப்படி இருக்க பல நாடகங்களை இயக்கியும், பல படங்களில் நடித்தும், அரசியலில் ஈடுபாடும் கொண்ட எஸ்.வி.சேகர், YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் "டெஸ்ட்".

இப்படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் பிறகு நீக்கப்பட்டுவிட்டு விட்டார். இந்த நிலையில், டெஸ்ட் படத்தை குறித்து தனது எக்ஸ் தளத்தில் "என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. அந்த வரலாறு தற்பொழுது தொடர்கிறது" என சாபமிட்டு பதிவு செய்திருந்தார். 

இந்த சூழலில், எஸ்வி சேகரை படத்தில் இருந்து விலக செய்தவர் நடிகர் சித்தார்த் என தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் எஸ்வி சேகர் உடன் நடிக்க முடியாது என நடிகர் சித்தார்த் தான் கூறினார் என எஸ்வி சேகரிடம் கூறியுள்ளனர் படக்குழுவினர். அதிலும் 'நீங்க மோடி ஆதரவாளர், அவர் எதிர்ப்பாளர், அதனால் அப்படி சொல்கிறார்' எனவும் இதுதான் படத்திலிருந்து உங்களை வெளியேற்ற காரணமாக இருந்தது எனவும்  கூறியுள்ளனர். இதனை கேட்டு கோபமான எஸ்வி சேகர், சித்தார்த் தன்னை அவமதித்து விட்டதால் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கூறியதாக தகவல் வந்தவண்ணம் உள்ளது. 

இந்தநிலையில், எஸ்.வி.சேகர் தனக்கு தாலி கட்டுவதை போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் முத்தழகு சீரியல் மூலம் பிரபலமடைந்த "நடிகை ஷோபனா". இதனை பார்த்த ரசிகர்கள் முதலில் ஷாக் ஆக, பின் தீவிரமாக விசாரித்ததில் உண்மை வெளியானது. அதன்படி, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் "மீனாட்சி சந்தரம்" என்ற சீரியலுக்கான ப்ரோமோ மற்றும் போட்டோ சூட் புகைப்படங்கள் தான் இவை. இதை தெரிந்து கொள்ளாத சிலர் இதை வைத்து எஸ்வி சேகரை ட்ரோல் செய்கிறார்கள்.

குறிப்பாக, இந்த சீரியலில் தன்னை மதிக்காத மகன் மற்றும் மருமகளுக்காக ஏன் வாழ வேண்டும்? என எண்ணி தனக்கு பிடித்த மாதிரி ஒருவாழ்க்கையை எஸ்.வி சேகர் தேர்வு செய்து இளம்பெண்ணான ஷோபனாமாவை திருமணம் செய்து கொள்ளும் கதையாக இந்த சீரியல் பார்க்கப்படுகிறது. சிரியலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா இவர் வாழ நினைத்தால் வயதான ஒரு பெண்மணியை திருமணம் செய்திருக்கலாம். ஆனால் இளம் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டுமா என இந்த சீரியலை ட்ரோல் செய்து வருவதுடன் இலவசமாக ஃபரமோஷனும் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டு நினைவு கூர்ந்து பார்த்தால் இரண்டு தினங்களுக்கு முன்பு எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் தளத்தில் "என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது" அதுபோல இவர் கமிட் ஆகி சீரியல் வெளியே கூட வரவில்லை ஆனால் சீரியல் இவ்வளவு ஃபேமஸ் ஆகிவிட்டதே, ஒருவேலை விலகி இருந்தால் என்ன ஆகியிருக்குமோ என நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த சீரியலில் நடிக்கும் ஷோபனா, ஏற்கனவே முத்தழகு சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகை தான். அது போல இப்போது மற்றொரு தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "பூங்காற்று திரும்புமா" என்ற சீரியலிலும் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். அந்த சீரியலுக்கான ப்ரோமோக்களும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாலியை அடமானம் வைத்து ஆப்பரேஷன்.. ரகசியத்தை போட்டுடைத்த மறைந்த நடிகர் சேதுவின் மனைவி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share