×
 

தாலியை அடமானம் வைத்து ஆப்பரேஷன்.. ரகசியத்தை போட்டுடைத்த மறைந்த நடிகர் சேதுவின் மனைவி!!

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி அளித்த பேட்டி அனைவரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். இந்த படத்திற்கு பிறகு சக்கை போடு ராஜா, வாலிபராஜா படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவரான இவருக்கு உமா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

தற்போது அவர் இறந்து 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது மனைவி உமா அளித்துள்ள பேட்டி அனைவரையும் நெகிழவைத்துள்ளது. அவர் அளித்த பேட்டியில், எல்லோரும் அவர் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், என்னுடன் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறார். அவர் ஆரம்பித்து வைத்த கிளினிக், நாங்கள் வாழும் வீடு என அனைத்திலும் அவர் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

சேதுவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்து போகக்கூடிய வாழ்க்கையும் நாங்கள் இருவரும் வாழவில்லை. மகன் வேதாந்த், மகள் சஹானா ஆகிய இருவரின் எதிர்காலமும் என் கையில் இருக்கிறது. அவர்கள் முன்னாடி நான் சோகமாக இருப்பது நடித்தாலும் தெரிந்து விடும். குழந்தைங்க முன்னாடி அப்படி நடித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பொய்யான வாழ்க்கையை கொடுத்துட்டோம் என்கிற எண்ணம் வந்துவிடும்.

அவங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதுதான் என் கடமை இருக்கிறது. என் குழந்தைங்க தான் என் நம்பிக்கை. எங்களது திருமணம் அரேஞ்ச் மேரேஜ் தான். எங்களுக்கு முதல் குழந்தை மகள் பிறந்தபோது எனக்கு பிடித்த கணவராகவும், என் குழந்தைக்க நல்ல தகப்பனாக சேது இருந்தார்.

இதையும் படிங்க: வீர தீர சூரனுக்காக விக்ரமின் நெகிழ்ச்சிப் பதிவு.. வாழ்றது ரொம்ப கஷ்டம் என புலம்பல்..!

என் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார். அவர் மாதிரியெல்லாம் யாரையும் பார்க்க முடியாது. அவரோட கனவு கிளினிக்கை தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். இப்போ அவர் இல்லாவிட்டாலும் அதை நான் செய்துகொண்டிருக்கிறேன் என உமா தெரிவித்துள்ளார். என் கணவருக்கு லவ் ப்ரோபோஸ், கிஃப்ட் கொடுக்க தெரியாது. நான்தான் அவரை சர்ப்ரைஸ் பண்ண கிஃப்ட் கொடுப்பேன்.

கிளினிக் போகும் போது சேது என்னையும் கூட்டி செல்வார். அப்படி ஒருநாள் நடந்த நிகழ்வை என் வாழ்வில் மறக்க முடியாது. ஒரு பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் பண்ணும்போது தாலியை அடமானம் வைத்து ஃபீஸ் கட்டியதை தெரிந்துகொண்ட சேது உடனே அவங்க கொடுத்த காசு வேண்டாம் என சொல்லிட்டாரு.

அந்த தாலியை மீட்டு கழுத்துல போட்டுக்கங்க என்றூ கூறி அவங்களுக்கு உதவியா ரூ.5,000 பணம் கொடுத்து அனுப்பினாரு. சேதுவை பார்த்து பல இடங்களில் பிரமித்து போனேன். மருத்துவராக மட்டும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு இருப்பது வியக்க வைத்தது. என் கணவர் ரொம்ப ஃபிட் இருப்பாரு. உடற்பயிற்சி எல்லாம் செய்வாரு ஆனால் அவரது மரணம் எதிர்பார்க்க முடியாத இழப்பு.

அந்த நேரத்தில் நான் கர்ப்பமாக இருந்தேன். என் மகன் இந்த உலகை பார்ப்பதற்கு முன்பே சேதுவின் மரணம் கொடுமையானது. இப்போ என்னை அவங்க அப்பா, அம்மா தான் சொந்த மகள் போல் பார்த்துக்கொள்கின்றனர். சேதுவின் ஆசையே நிறைவேற்றுவது தான் என் கனவு என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாவு பயத்தில் இளையராஜா... குடும்பத்தை நினைத்து கண்ணீர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share