×
 

மீசை வைத்த வடிவேலுவாக வந்த சுப்ரமணியன் வடிவேலு.. வடிவேலுவின் 2.0 வர்ஷன் என ரசிகர்கள் ஆரவாரம்..!

வைகைப்புயல் வடிவேலுவின் மிரட்டும் சாயலில் இருக்கும் அவரது மகனின் புகைப்படங்கள் வெளியானது.

தமிழ் திரையுலகில் தான் உருவாக்கியதை பிறர் பயன்படுத்தினால் காஃபி ரைட்ஸ் போடும் பழக்கம் சில வருடங்களாக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்களிடையே வலுத்து வருகிறது. இப்படி இருக்க, காமெடிகளுக்கும் டைலாக்குகளுக்கு இதுவரை காஃபி ரைட்ஸ் போடாத ஒரே நடிகர் என்றால் அது வைகை புயல் வடிவேலு தான். இதனை பற்றி அவர் கூறும்பொழுது, "நான் நடிக்காமல் இருக்கும் காலத்திலும் என் காமெடிகள் எப்பொழுது பயன்பாட்டில் இருப்பது கடவுள் எனக்கு கொடுத்த வரம்" என சொன்னார். இப்படி பல புகழுக்கு சொந்தமானவர் இவர்.

அப்படி காஃபி ரைட்ஸ் போடும் அளவிற்கு என்ன டயலாக் சொல்லி இருக்கிறார் என்று பார்த்தால் அவரது பாணியில் "போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிற்றுக்கு" என்று சொல்வதை போல் பல டயலாக்குகள் இருக்கிறது. அதில் வடிவேலுவின் சிறந்த டயலாக்குகளாக இன்றுவரை பார்க்கப்படுவது என்றால் "ஏய்"திரைப்படத்தில் ‘இப்பவே கண்ண கட்டுதே’ மற்றும் ‘கொஞ்சம் ஓவராதான் போறோமோ..போவோம்..! என்ன பண்ணிடுவாங்க', வின்னர் திரைப்படத்தில் ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’மற்றும் ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ அதே படத்தில் ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’

இதையும் படிங்க: சின்ன சின்ன முருகையா...! மயில் வாகனத்தில் க்யூட்டாக என்ட்ரி கொடுத்த ரோபோ ஷங்கரின் பேரன்..!

மற்றும் 'போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது', ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையப்பா’ அடுத்தாக சந்திரமுகியில் ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு', சீனாதானா 001ல் ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’கிரி திரைப்படத்தில் ‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன்' மற்றும் 'பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, தலைநகரம் படத்தில் ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மென்டு வீக்கு’, மருதமலை திரைப்படத்தில் ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி' என பலகோடி டையலாக்குகள் உண்டு.

இத்தனை டயலாக்குகளின் சொந்தக்காரரான வடிவேலுவின் திரையுலக பயணம் 1988 ஆம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டு வரை நீடித்து கொண்டே இருக்கிறது. ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் என்றால் அது கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’  தான். இப்படத்தில் தான் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு தம்பிராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதேபோல் தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.  

இவரது நடிப்பு வாழ்க்கை ஒரே ஒரு பிரச்சாரத்தில் சிறிது காலம் முடங்கி போனது. குறிப்பாக 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த பிரச்சாரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இவரது நேரமோ என்னமோ தெரியவில்லை அந்த தேர்தலில் தி.மு.க கட்சி படு தோல்வி அடைந்தது. இதனால் வடிவேலுவை புரட்டி எடுத்தனர். சிக்கலுக்குள்ளான வடிவேலு பல மாதங்களாக சினிமாவில் நடிக்க விடாமல் தடை செய்தனர். இதனால் மனவேதனையில் இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு 2021ம் ஆண்டுக்கும் மேல் திரையில் நடிக்க ஆரம்பித்தார். 

இந்த சூழலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக "மாமன்னன்" படத்தில் அட்டகாசமாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் வந்த "என்னங்க ஒண்ணுமே புரியல" என்ற டையலாக்குகள் தற்பொழுது மீம்ஸ்களில் வலம் வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது சுந்தர் சியின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் வடிவேலு. 

இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் மகன் சுப்ரமணியனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அச்சு அசலாக மீசை வைத்த வடிவேலுவை போலவே இருக்கும் அவரது முகத்தை பார்த்து ரசிகர்கள் வடிவேலு 2.0 என்று கூறிவருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், இன்று சந்தானம், கிங்ஸ்லி, யோகிபாபு, சூரி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதிஷ் என பலர் வந்தாலும் என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு தான் என புகழாரம் சூட்டி வருகின்றனர்.


 

இதையும் படிங்க: பிரபாஸுடன் இணையும் மக்கள் செல்வன்..! கல்கி படத்திற்கு பின் உருவாகியுள்ள பிரம்மாண்ட கூட்டணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share