×
 

நடிகர் விஜயின் அடுத்த பட அப்டேட்.. இந்த மாதம் வெளியாகிறது விஜயின் திரைப்படம்..!

நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்திற்கான மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது.

கணினி தொழில்நுட்ப வளர்ச்சியில் என்று ஏஐ வந்ததோ அன்றிலுருந்து சினிமா துறையில் நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது புதிய படங்களின் எண்ணிக்கை அதிகமாக வெளியாவதில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க தயாரிப்பாளர்கள் புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளனர். அதன்படி பழைய திரைப்படங்களை எல்லாம் தூசு தட்டி எடுத்து அதனை ஏஐ தொழிநுட்பத்தை பயன்பத்தி இக்காலத்து படைப்புகளுக்கு இணையாக மாற்றி ரீரிலீஸ் செய்து ரசிகர்களை குஷி படுத்துவதுடன் வசூலையும் வாரி குவித்து வருகின்றனர். 

அந்த வகையில், இதுவரை நடிகர் விஜய்யின் நடிப்பில் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் இருவருக்கும் வில்லனாக பிரகாஷ்ராஜும் நடித்து "செல்லம் ஐ லவ் யூ" என்ற ஒற்றை வார்த்தையில் மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படமான 'கில்லி' ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது. இதனைப்பார்த்த மற்ற தயாரிப்பாளர்கள் இதே பேட்டனை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

அதன்படி, அடுத்ததாக 'பாபா' படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. அதில் தியேட்டரில் கவுண்டமணி "டேய் பாபா வந்துருக்காரு லைட்ட போடுடா" என்று சொல்லும் பொழுது உண்மையிலேயே தியேட்டர் ஆபரேட்டர் லைட்டை ஆன் செய்து ஆஃப் செய்து இருப்பார். இந்த காட்சிகளும் இணையத்தில் ட்ரெண்டாகி பலரும் இப்படத்தை பார்க்க சென்றனர். 

இதையும் படிங்க: படம் பிளாப்பு ஆனா பாட்டு ஹிட்டு... சன் பிக்சர்ஸ் பதிவிட்ட சாதனை புகைப்படம்..!

இதனை தொடர்ந்து, ரஜினியின் பாட்ஷா படமும் ரீரிலீஸ் ஆகி இருக்கிறது. மேலும் அப்பொழுதே நூறு நாட்களைக் கடந்து வசூலில் சாதனை படைத்த ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி "21 ஆண்டுகள்" நிறைவடைந்து உள்ளது. இயக்குநர் சேரனின் திரையுலக பயணத்தில் ஹிட் கொடுத்த இந்த படம் மீண்டும் AI தொழில்நுட்பத்தில் கண்களுக்கு விருந்தாக, புதிய பரிமானத்தில் ரீரிலிஸ் செய்யப்பட உள்ளது. 

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' 15 வருடமங்களுக்கு பின் மீண்டும் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அமெரிக்காவிலும் மார்ச் 14ம் தேதி வெளியாகி அசத்தியது. அதே தேதியில், நடிகர் ரவிமோகனின் நடிப்பில் வெளியாகியிருந்த எம்.குமரன் சன்ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படம் தமிழகத்தில் 20 திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகி வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்படி இருக்க, விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் அனைவருக்கும் பிடித்த சச்சின் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான நடிப்பில் வெளியான "ரஜினிமுருகன்" போன்ற படங்கள் ரீ ரிலீஸ் லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது. இந்த நிலையில், இத்தனை படங்களை தொடர்ந்து நடிகர் விஜயின் அட்டகாசமான படம் ரீரிலீஸ் ஆக உள்ளது. 

அதன் படி,கடந்த 2002 ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ரீமா சென், வடிவேலு, ஜெய், பொன்னம்பலம், இளவரசு ஆகியோருடன் விஜய் நடித்த திரைபைடம் தான் "பகவதி". அப்பொழுதே ரூ.4 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், டீ கடை நடத்தி வருவார். பிறகு தனது தம்பி மரணத்திற்கு பழிவாங்க ஒரே சபதத்தில் கேங்ஸ்டராக மாறி பணக்காரனாக அவதாரம் எடுத்து பல கார்களில் வந்து வில்லனுக்கு இம்சை கொடுப்பார்.  

இதில் என்னதான் நடிகர் விஜய் பகவாதியாக இருந்தாலும், குட்டி பகவாதியாக என்றும் அனைவரது மனதில் இடம் பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு தான். இப்படி நகைச்சுவைக்கும், ரொமன்ஸ்க்கும், ஆக்ஷனுக்கும் பஞ்சமே இல்லாத பகவதி திரைப்படம் மார்ச் 21னரான நாளை அனைத்து திரையங்குகளிலும் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share