ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்.. சும்மா சும்மா வம்பிழுப்பதால் தொண்டர்கள் காட்டம்...!
தற்பொழுது நடிகர் மற்றும் தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வைக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.இதனால் தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் படம் ரிலீஸ் ஆகும் பொழுது பிரச்சனையை சந்திக்கும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் தான். அவருடைய படம் எப்பொழுது வெளியே வந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கிய பின்பே படம் வெளியே வரும். அந்த அளவிற்கு அவர் நடித்த தலைவா படம், சர்க்கார் படம், என அனைத்தும் பிரச்சனைகளுக்குரியதாகவே மாறி இருந்தது.
தலைவா படத்தில் வரும் "தளபதி" என்ற பாடல் எங்கள் கட்சி தலைவருக்குத்தான் சொந்தம் என ஒருபுறம் சண்டையிட்டுக் கொள்வதும், மறுபுறம் அரசியல் குறித்து பேசினால் விஜயை அவதூறாக பேசுவதுமான பல பிரச்சினைகளை நடிகர் விஜய் அவ்வப்போது சந்தித்து தான் வந்தார்.
இதையும் படிங்க: சைவ உணவுக் கொள்கையை விஜய் பரப்புகிறார்... சர்ச்சையில் ப்ளூ சட்டை மாறன்...!
ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமாக மாற, எல்லா நடிகர்களும் கட்சிகளை ஆரம்பிப்பது போல, இவரும் முழு நேர அரசியலில் குதிக்கப் போவதாக கூறி மக்களையும், தியேட்டர் ஓனர்களையும், தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், திக்கு முக்காட வைத்தார். சரி, ஒரு பேச்சுக்காக தான் நடிகர் விஜய் இப்படி கூறுகிறார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில், திடீரென ஒரு நாள் கட்சியின் பெயர் "தமிழக வெற்றிக்கழகம்" எனக் கூறி, தனது கட்சிக்கு என சின்னங்களை அறிமுகப்படுத்தி, விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்து தனது அரசியல் பயணத்தின் முதல் மைல் கல்லை தமிழகத்தில் ஆணித்தரமாக விதைத்தார்.
இந்த நிலையில், விஜய் திரையுலகில் தனது இறுதி படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வரும் சூழலில், தவெக கட்சித் தொடங்கி அதன் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் தலைவர் விஜய், மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய் எங்க அரசியல் மீட்டிங் போட்டாலும் அங்கு சைவ உணவுகளே பெரும்பாலும் பரிமாறப்படுவதாகவும், மறைமுகமாக சைவ உணவு மனப்பான்மையை கொண்டு வருகிறாரா விஜய்..? எனவும் ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பினார்.
இந்த நிலையில், நடிகர் விஜயை குறித்து தனது எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் "ப்ளூ சட்டை மாறன்", அதில் அவர் "What bro? This is wrong bro: 'தலைவா' பிரச்னைக்கு கொடநாட்டில் முதல்வரை பார்ப்பேன். ரெய்டு பிரச்னைக்கு கோவையில் பிரதமரை பார்ப்பேன், 'மாஸ்டர்' பிரச்சனைக்கு கோட்டையில் முதல்வரை பார்ப்பேன். ஆனால் மக்களுக்காக பேச அனைத்துகட்சி மீட்டிங் போகாமல் ஷூட்டிங் போய்விடுவேன் என அனைத்து கட்சி கூட்டத்துக்கும் வராமல் படப்பிடிப்பிலே விஜய் பிசியாக இருப்பது ஏன்? என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை பார்த்த விஜயின் தொண்டர்கள் கொதித்து போய் உள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. மேலும், அடவாடி செய்யும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க உங்களுக்கு துணிவு இல்லை, ஆனால் அரசியலில் கால் வைத்தது முதல் விஜயை குறித்து அவதூறு பேச மட்டும் துணிவு இருக்கிறது. அந்த அளவிற்கு அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என நினைப்பவர் விஜய் ஆதலால் தான் தெளிந்த நீரோடையை போல் ஒட்டிக்கொண்டு இருக்கிறார் என தொண்டர்கள் பதிவிட்டு தங்களது கொந்தளிப்பை வெளிக்காட்டி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் விஜய் மகன் கூட்டணி.... அரசியலில் வாரிசு நுழைகிறதா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!