×
 

வெறுப்பு வேண்டாம் மனிதநேயம் போதும்..! இந்தியா-பாகிஸ்தான் மக்களுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு..!

பதிலடி நல்லது.. ஆனால், பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் இந்தியா என தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.  

காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. 

மேலும், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை குறித்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து கூட ஓடமுடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த இடத்தை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் மட்டுமே அதிகம் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். கார்களிலோ அல்லது கனரக வாகனங்களிலோ செல்ல முடியாது. இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர். 

இதையும் படிங்க: கொஞ்சம் யோசிங்க விஜய்.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க..! இயக்குனர் மிஷ்கின் பேச்சு..!

இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதால் இரண்டு நாடுகளில் உள்ள மக்களும் பதற்றத்தில் உள்ளனர். மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல கூடிய நீர் முதல் போக்குவரத்து வரை அனைத்தும் தடை செய்துள்ளது இந்திய அரசாங்கம். அதே போல் பாகிஸ்தானிலும் வான்வழி பயணங்களில் இந்தியாவிற்கு தடைவித்தித்துள்ளது.

இனி எந்த பேச்சுவார்த்தையும் அல்ல, இந்தியா அடித்தால் திருப்பி அடிப்போம் என பாகிஸ்தானும் எதிர்த்து நிற்கிறது. எனவே உலகநாடுகள் அனைத்தும் இந்த பிரச்சனையை உற்றுநோக்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தங்களது ஏவுகணைகளை சோதனை செய்து வருகின்றனர். இதனால் இருநாடுகளிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது . 

இந்த சூழலில், இதுவரை சூர்யா, ஆண்ட்ரியா, காஜல் அகர்வால் என பல நடிகர்கள் தங்களது கண்டனங்களை பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டு வந்த நிலையில், தற்பொழுது அவர்கள் வரிசையில், நடிகர் விஜய் ஆண்டனியும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்து உள்ளார். அதன்படி "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல தான், அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். எனவே, வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்." என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விளக்கு பிடித்ததை பார்த்தியா... தவறாக பேசக்கூடாது...! சத்யராஜ் மகளுக்கு வார்னிங் கொடுத்த மதுவந்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share