×
 

விளக்கு பிடித்ததை பார்த்தியா... தவறாக பேசக்கூடாது...! சத்யராஜ் மகளுக்கு வார்னிங் கொடுத்த மதுவந்தி..!

சத்யராஜின் மகளை விளாசி எடுத்த மதுவந்தியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்து இருக்க, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி வருவது ஒன்றும் புதியது அல்ல. இதில் புதியது என்ன வென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் காலை வைத்த உடனே அதன் தாக்கம் தாங்காமல் பின் வாங்கினார்.

அவரை தொடர்ந்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அனைவரது பாராட்டையும் பெற்ற கமல்ஹாசன் பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரது கட்சியின் பெயர் மக்களின் காதுங்களில் இருந்து மறைந்து போனது. இவர்களை பார்த்து இன்ஸ்பையர் ஆன நடிகர் விஷாலும் கட்சி தொடங்க போகிறேன் என அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். 

ஆனால் அனைவரும் அதிர்ந்து ஆச்சர்யப்பட்ட விஷயம் என்றால் அதுதான் நடிகர் விஜய் "மக்கள் முன்னேற்ற கழகம்" என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தது. இதெல்லாம் சும்மா நாடகம் என பலர் சொன்னாலும் பல தடைகளை மீறி விக்ரவாண்டியில் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் விஜய்.

பின் தனது கட்சி உறுப்பினர்களை வைத்து மீட்டிங் போடுவது போன்ற வேளைகளில் ஈடுபடும் விஜய் திமுகவை எதிர்ப்பது தான் எனது முதல் குறிக்கோள் என்பதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே" என்றும் "மோடி அவர்களே" என்றும் அவர் கூறியது பலரது கவனத்தை எட்டியது. நம் விஜய் நல்ல தலைவராக வருவாரு போலயேப்பா என அனைவரும் கூறும் அளவிற்கு மக்களை தற்பொழுது மயக்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம்..! இனி தான் ஆட்டம் சூடுபிடிக்க போகிறது..!

இந்த சூழ்நிலையில், விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் பாஜக கட்சியை விமர்சிக்க துடித்த நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், திமுக கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆரம்பத்தில் மைக்கை பிடித்தவுடன் அய்யோ நம்ப மைண்டு அங்கேயே போகுதே என நினைத்த அவர் முதலில், விஜயை குறித்தும் திரிஷாவை குறித்தும் அவர்கள் விமான பயணங்களை குறித்தும் பேசினார். இதில் கடுப்பான ப்ளூ சட்டை மாறன் முதலில் அரசியலில் பேச கற்றுக்கொண்டு வாங்க, அரசியல் ரீதியாக தான் பேச வேண்டும் அவர்கள் சொந்த காரியங்களை பேச கூடாது என விளாசி எடுத்தார். 

இதனை அடுத்து, பாஜக குறித்து பேசிய திவ்யா சத்யராஜ், ஸ்டாலின் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என தெரியுமா..? கொரோனா காலத்தில் வந்த அவர் பல பேரை காப்பாற்றினார்.. அதிமுக விட்டு சென்ற அனைத்தையும் சரி செய்தார். பணமும் கொடுக்கவில்லை தமிழ் நாட்டை வஞ்சித்தீர்கள் ஆனாலும் அவைகளை மிகவும் அழகாக கையாண்டார்.

ஆனால் பாஜக தலைவர்கள் என்ன செய்தார்கள்? வாங்க அனைவரும் ஜாலியாக பால்கனியில் நின்று கொண்டு விளக்கு பிடிக்கலாம் , கைதட்டலாம் என்று சொல்லி மக்கள் மனதில் மூட நம்பிக்கைகளை விதைத்தீர்கள் என காட்டமாக பேசி இருந்தார். இது தற்பொழுது பேசுபொருளாக மாறி விமர்சனத்திற்குள்ளாகி  இருக்கிறது. 

இப்படி இருக்க சத்யராஜ் மகளின் பேச்சுக்கு பதிலளித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, "விளக்கு பிடிச்சாங்க என்று அவர் பேசியது சரியான வார்த்தை கிடையாது. அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று நீங்களே உங்கள் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேடையில் என்னென்ன பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. அது உங்களுக்கு ஏன் தெரியவில்லை? என்று எனக்கு புரியவில்லை.

பாஜகவினர் விளக்கை பிடிக்க சொல்லவில்லை, விளக்கை ஏற்ற சொன்னார்கள், சத்தங்களை போட சொன்னார்கள். அது மனதிற்குள் ஒரு பாசிடிவிட்டியை உருவாக்கும் என்பதற்காக அப்படி செய்யச் சொன்னார்கள். ஆனால், பாஜக செய்த நன்மைகளை யாரும் சொல்லவில்லையே. கொரோனா நேரத்தில் நரேந்திர மோடி அவர்கள் மட்டும் பிரதமராக இல்லை என்றால் என்ன ஆயிருக்கும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

உண்மையில் கொரோனா சமயத்தில் பிஜேபி என்ன செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கான வரலாற்று புத்தகங்கள் எதுவும் தேவையில்லை. விவேக் அக்ரிகோத்ரி எடுத்த 'The vaccine War' என்ற படத்தை பாருங்கள். அது மட்டுமல்லாமல் இணையத்திலேயே பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன அதை பார்த்து, கொரோனா நேரத்தில் பிஜேபி எந்த அளவிற்கு வேலை செய்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசிய அந்த வார்த்தை மிகவும் தவறான வார்த்தை, அதை சரி செய்து கொள்ளுங்கள்.

ஏனென்றால், உங்களுடைய அப்பா சத்யராஜ் அவர்கள் மிகப்பெரிய நடிகர், நல்ல பேச்சாளர். அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. கொள்கை ரீதியாக நான் அவரை எதிர்த்தாலும், அவர் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. எனவே நீங்கள் இது போன்ற விஷயங்களை எல்லாம் சரி செய்து கொண்டால் பிற்காலத்தில் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்பதை ஒரு தோழியாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என காட்டமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திரையில் தான் நீங்க ஹீரோ; இதுல நீங்க ஜீரோ... விஜய்யை விளாசிய போஸ் வெங்கட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share