×
 

மீண்டும் ரவீனாவிற்கு ரெட் கார்டு..! தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி.. இத்தனை வருடம் நடிக்க தடையா..?

 ரவீனாவின் சீரியல் பிரச்சனை மீண்டும் பூதாகாரமானதால் வருத்தத்தில் உள்ளனர் ரவினாவின் ரசிகர்கள். 

பிரபல தொலைக்காட்சியின் செல்ல பிள்ளையாக வலம் வரும் அழகிய சின்னத்திரை நடிகை என்றால் அதுதான் ரவீனா. குழந்தை முகம் மாறாத அழகு பிள்ளையான ரவீனா என்னதான் கிளாமராக உடை அணிந்து பல போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டாலும் அவரை பார்ப்பவர்கள் இன்னும் அவரை குழந்தையாகவே பார்த்து வருகின்றனர்.

ஆனால் ஆள் பார்க்க குட்டியாக இருந்தாலும் செயல்களில் சுட்டி என்றே சொல்லலாம். ஆளுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லாததை போல் இவரது உருவத்திற்கும் செயலுக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த அளவிற்கு துறுதுறு என இருப்பவர். நடனம் என்று வந்தால் தனது உடலை வளைத்து நெளித்து லப்பராக மாறி அசத்துபவர் என்றே சொல்லலாம். 

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அசத்தலான கோமாளியாக வந்த ரவீனாவிற்கு பல ரசிகர்கள் பட்டாளம் பெருகியது. இதனை அடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவீனா, தன்னுடன் இருந்த சகப்போட்டியாளரான நடன கலைஞர் மணியுடன் காதல் வயப்பட்டு சுற்றி வந்தார். இப்படி பட்டவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததில் இருந்து தனது இன்ஸ்ட்டா பகுதியில் நடனம் ஆடும் வீடியோக்களையும் கிளாமர் காட்சிகள் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை கொண்டு வருகிறார். 

இதையும் படிங்க: ரெட் கார்டு விவகாரம்...! உண்மையை உடைத்து சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீனா..!

இப்படி இருக்க, ரவீனா குக்வித் கோமாளி மற்றும் பிக்பாஸில் மட்டும் தோன்றவில்லை. "7c" என்ற சின்னத்திரை சீரியல் மூலமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருந்தார். அதன்பின் "இசையில் மனம் கலங்குவது ஏனோ" என்ற பாடலை கேட்டால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் "மௌன ராகம்" சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது ரசிகர்களை மகிழ்வித்த ரவீனா சில நாட்களாக தொலைக்காட்சிகளில் தோன்றாமல் மறைந்து இருந்தார். ஏன்? ரவீனா எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சூழலில், ரசிகர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தனர்.

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், "படித்து பெரிய வேலைக்கு போக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கதாநாயகிக்கும், படிக்காத முரட்டுத்தனமாக இருக்கும் இளைஞருக்கும் திருமணம் நடக்கும் பொழுது வாழ்க்கையில் என்ன மாதிரி எல்லாம் பிரச்சனைகள் நடக்கும் என்பதை உணர்த்தும் "சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்" என்ற சிரியலுக்கான புரோமோவில் கதாநாயகியாக தோன்றினார் நடிகை ரவீனா. இந்த ப்ரோமோவுக்கு பின் ரவீனா அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பின் தான் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றவில்லை", என்பதை கண்டு பிடித்தனர். 

இதனை அடுத்து, இணையத்தில் பல தகவல்கள் வெளியாகின அதில், சிந்து பைரவி சீரியலில், ரவீனா கதாநாயகி என கூறிவிட்டு பின் இந்த சீரியலில் இரண்டு கதாநாயகிகள் என கூறியுள்ளனர். இதனால் கடுப்பான ரவீனா அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் அந்த சீரியலின் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ரவீனா மீது புகார் கொடுத்ததாக கூறப்பட்டது.

அதோடு ரவீனா இனி எந்த சின்னத்திரை சீரியலிலும் நடிக்கக் கூடாது என்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என்றும் புகார் அளித்ததால் அவருக்கு "ரெட் கார்டு" கொடுத்ததாக கூறப்பட்டது. இப்படி இருக்க, ரவீனா சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் என்பவருக்கு ஜோடியாக களமிறங்கி ஆடி வருகிறார்.

இந்த நிலையில், ரவீனாவுக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தால் எப்படி இந்த நிகழ்ச்சியில் வந்து அவரால் பங்கு கொள்ள முடியும்? என்ற பேச்சுக்கள் இணையத்தில் உலா வந்தன. இந்த சூழ்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ரவீனா பதிலளித்தார், அதில் "என் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எனக்கு ரெட் கார்ட் எல்லாம் தரப்படவில்லை.

அதுபோல கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட போது பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக அதற்கு தீர்வு காணப்பட்டது.அதனால் நான் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் தற்பொழுது நடனமாடி வருகிறேன். அதுபோல சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகியதற்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்றுமில்லை என்னுடைய பர்சனல் காரணம்தான் வேறு எதுவும் இல்லை" என்று விளக்கம் கொடுத்திருந்தார். 

இப்படி இருக்க, தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ரவீனாவிற்கு மீண்டும் ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது. அதன்படி, ரவீனா மீது வைத்த தடையை எந்த சேனல்களும் மதிப்பதாக தெரியவில்லை என்பதால் கோபமடைந்த சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகி ரவீனாவிற்கு எதிராக புகார் கடிதம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

அதற்கு பின், மீண்டும் சங்கத்திலிருந்து ரவீனாவையும் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து கூப்பிட்டு பேசி இருந்தார்கள். அப்பொழுது பேசுகையில், கமிட் ஆன பிறகு சீரியலில் இருந்து விலகியதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி, ரவீனாவிற்கு சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்குபெற ஓராண்டு தடை விதித்து மீண்டும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஆனாலும் தயாரிப்பு தரப்பில் இரண்டு வருஷம் கேட்டார்கள்.

ஆனால், அவருடைய கெரியரின் நலன் கருதி ஒரு வருஷம் தடை போடப்பட்டிருக்கிறது. இதற்கு ரவீனா தரப்பிலிருந்து தன்னுடைய செயலுக்கு வருத்தம் கேட்டு மன்னிப்பு கடிதம் ஏதாவது வழங்கினால் மட்டும் தான் மேற்கொண்டு இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என ஆலோசிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

இதையும் படிங்க: ரெட் கார்டு விவகாரம்...! உண்மையை உடைத்து சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share