ரெட் கார்டு விவகாரம்...! உண்மையை உடைத்து சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீனா..!
ரெட் கார்டு தொடர்பான சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை ரவீனா.
பார்க்க அழகாவும் நடனத்தில் புலியாகவும் சிரிக்க வைப்பதில் சார்லின் ஷேப்லினாகவும் கிளாமரில் ஆளை மயக்குபவராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வருபவர் தான் ரவீனா. இவரை அதிகமாக குக்வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்திருக்க முடியும். குக்வித் கோமாளியில் தனது அபார காமெடி திறமையால் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த நடன கலைஞரான மணியுடன் காதல் வயப்பட்டு சுற்றி வந்தார். இப்படி பட்டவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததில் இருந்து தனது இன்ஸ்ட்டா பகுதியில் நடனம் ஆடும் வீடியோக்களையும் கிளாமர் காட்சிகள் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை கொண்டு தன் வசம் வைத்திருக்கிறார்.
இப்படி இருக்க, ரவீனா குக்வித் கோமாளி மற்றும் பிக்பாஸில் மட்டும் தோன்றவில்லை. இவைகளுக்கு முன்பு சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரவீனா, வெள்ளித்திரையிலும் நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் "7c" என்ற சின்னத்திரை சீரியல் மூலமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருந்தார். அதன்பின் "இசையில் மனம் கலங்குவது ஏனோ" என்ற பாடலை கேட்டால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் "மௌன ராகம்" சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்...! கண்ணீர் விட்டு கதறிய வரலட்சுமி, கேமி..! கட்டியணைத்து அழுத ஸ்னேகா..!
இதனை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது ரசிகர்களை மகிழ்வித்த ரவீனா சில நாட்களாக தொலைக்காட்சிகளில் தோன்றாமல் மறைந்து இருந்தார். ஏன்? ரவீனா எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சூழலில், ரசிகர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தனர்.
சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், "படித்து பெரிய வேலைக்கு போக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கதாநாயகிக்கும், படிக்காத முரட்டுத்தனமாக இருக்கும் இளைஞருக்கும் திருமணம் நடக்கும் பொழுது வாழ்க்கையில் என்ன மாதிரி எல்லாம் பிரச்சனைகள் நடக்கும் என்பதை உணர்த்தும் "சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்" என்ற சிரியலுக்கான புரோமோவில் கதாநாயகியாக தோன்றினார் நடிகை ரவீனா. இந்த ப்ரோமோவுக்கு பின் ரவீனா அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பின் தான் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றவில்லை", என்பதை கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து இணையத்தில் பல தகவல்கள் வெளியாகின அதில், சிந்து பைரவி சீரியலில், ரவீனா கதாநாயகி என கூறிவிட்டு பின் இந்த சீரியலில் இரண்டு கதாநாயகிகள் என கூறியுள்ளனர். இதனால் கடுப்பான ரவீனா அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் அந்த சீரியலின் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ரவீனா மீது புகார் கொடுத்ததாக கூறப்பட்டது.
அதோடு ரவீனா இனி எந்த சின்னத்திரை சீரியலிலும் நடிக்கக் கூடாது என்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என்று அவருக்கு "ரெட் கார்டு" கொடுத்ததாக கூறப்பட்டது. இப்படி இருக்க, ரவீனா சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் என்பவருக்கு ஜோடியாக களமிறங்கி ஆடி வருகிறார்.
இந்த நிலையில், ரவீனாவுக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தால் எப்படி இந்த நிகழ்ச்சியில் வந்து அவரால் பங்கு கொள்ள முடியும்? என்ற பேச்சுக்கள் இணையத்தில் உலா வந்தன. இந்த சூழ்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார் ரவீனா, அதில் "என் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எனக்கு ரெட் கார்ட் எல்லாம் தரப்படவில்லை. அதுபோல கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட போது பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக அதற்கு தீர்வு காணப்பட்டது.
அதனால் நான் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் தற்பொழுது நடனமாடி வருகிறேன். அதுபோல சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகியதற்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்றுமில்லை என்னுடைய பர்சனல் காரணம்தான் வேறு எதுவும் இல்லை" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: பிரபல ஷோவுக்கு வீடியோ காலில் வந்த பிரபலம்...! வீட்டிற்கு அழைத்து நெகிழ்ச்சி அடைய செய்த சுவாரசிய சம்பவம்..!