×
 

பிரபல ஷோவுக்கு வீடியோ காலில் வந்த பிரபலம்...! வீட்டிற்கு அழைத்து நெகிழ்ச்சி அடைய செய்த சுவாரசிய சம்பவம்..!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீடியோ காலில் வந்து அசத்தி இருக்கிறார் நடிகர் ஒருவர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் தனது திறமைகளை காண்பித்து தங்களுக்கான பரிசுகளை பெற்று வருகின்றனர். அதே நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்று சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஒன்று தொகுப்பாளர் மணிமேகலை இரண்டாவது வரலட்சுமி மூன்றாவது பிரபல நடிகர் ஒருவர் போட்டியாளரை தன் வீட்டிற்கு அழைத்தது. 

இப்படியிருக்க முதலில், தொகுப்பாளினி மணிமேகலை, போட்டியாளருக்கு அட்வைஸ் பண்ணும் வகையில், "நான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளராக தான் இருந்தேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த பொழுது, இவங்க நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக லீட் கொடுப்பாங்க, அதுவுமில்லாம லிங்க் கொடுப்பாங்க, இவங்கள நிகழ்ச்சியில் கோமாளியாக பண்ண விட்டா எப்படி பண்ணுவாங்கனு ரொம்ப ஏளனமா பேசுனாங்க. ஆனா, இப்போ மணிமேகலை சூப்பரா பர்வார்ம் பண்ணுவாங்க, அவங்களுக்கு ஆக்டிங்கும் வருமா என அனைவரும் கூறும் அளவுக்கு இப்போ உயர்ந்து இருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது உழைச்சா எது வேணா செய்யலாம்.. புரியுதா" என கண்கலங்கி பேசினார். 

இதையும் படிங்க: வரலட்சுமியின் பிறந்தநாளில் ஹார்ட் டச் ட்ரீட்... கணவருக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி..!

இது ஒருபுறம் ட்ரெண்டாக மாறி வர இரண்டாவதாக இப்போட்டியில் தற்பொழுது புதிய நடுவராக களமிறங்கி இருக்கிறார் வரலட்சுமி. இவர் 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். பின் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லையாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இதனை அடுத்து  சுந்தர் சியின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பல வருடங்களுக்கு முன்பாக சமீபத்தில் ரிலீசாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. இப்படி பட்டவர் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி வருகிறார். அவர் மட்டுமல்லாமல் சினேகா, பாபா பாஸ்கர் என இரண்டு நடுவர்களை கலக்கி வருகின்றனர். 

இந்த நிலையில், இப்போட்டியில் பங்கு பெற்று நடனத்தில் கலக்கி வருவதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார் போட்டியாளர் பஞ்சமி. பார்க்க எப்பொழுதும் சேலையுடன் இருக்கும் பஞ்சமி, பாடல் ஒலிக்கும் வரை அமைதியாக இருப்பார். பாடல் ஒலிக்க ஆரம்பித்தால் நடனத்தில் பத்ரகாளியாக மாறிவிடுவார். இப்படி இருக்க இவருக்கு திருமணமான பின்பு 3 பிள்ளைகள் பிறந்துள்ளது. பின் தனது குடும்ப சூழல் காரணமாக நடனம் ஆட முடியவில்லை என்றும் ஆனால் தற்பொழுது தனது ஆசையை அவரது கணவர் துணையாக நின்று நிறைவேற்றியதாக கூறியுள்ளார். இதனை பார்த்த சரத்குமார் பஞ்சமிக்கு ஷோவின் நடுவில் வீடியோ காலில் வந்து வாழ்த்து சொல்லி, அவரை குடும்பத்துடன் உணவு சாப்பிட தனது வீட்டிற்கு வர வேண்டும் என்றும் கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனை கேட்டு பஞ்சமி அப்படியே கண்கலங்கி அழுத காட்சி அனைவரையும் பரவசமடைய செய்தது.  

இதையும் படிங்க: மேடையில் கண்கலங்கிய மணிமேகலை...! ஓடி வந்து ஆறுதல் கூறிய பாபா பாஸ்கர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share