காட்டூரில் காட்டு ராஜ்ஜியம்… 'அறம்' தவறிப்போனாரா கோபி நயினார்..? 'கொல்லப்படுவேன்' நாடகமா..?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பின்புலம், திரைத்துறை பிரபலம், சாதிய ஆதரவு என அடுத்தடுத்து எங்கு எந்த வேலை நடந்தாலும் அங்கு சென்று போராடுவது, எதிர்ப்புத் தெரிவித்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என தொடர்ச்சியாக அதிரடி காட்டி வந்தார்.
திரைப்படத் துறையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் கோபி நயினார். 'அறம்' அவருக்கு வெற்றியாய் அமைந்ததால் அறம் கோபி நயினாராகவே கொண்டாடப்பட்டார். அடுத்து கருப்பர் நகரத்தில் தொடங்கிய சர்ச்சை இப்போது 'தான் கொலை செய்யப்படலாம் 'என அவர் அஞ்சுவதுரை பகைமையாக வந்து நிற்கிறது.
தனது எழுத்து, ஆழமான வாசிப்பு இன்னபிற திறமைகளால் மீஞ்சூர் கோபி என்றே அப்பகுதிகளில் அறியப்பட்டவர் கோபி. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, மீஞ்சுருக்கு அருகில் இருக்கிறது காட்டூர் கிராமம்தான் அவரது சொந்த ஊர். அறம் படத்தை இயக்கிய கோபி நயினாரின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மனுஷி என்கிற திரைப்படம் அவரது இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
கருப்பர் நகரம் படம் இயக்கித் தருவதாக இலங்கை பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும் கோபி நயினார் மீது 2018ல் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சியாமளா புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரி சொன்ன வாரத்தை.. ஏமாற்றத்தில் பரமேஸ்வரி பாட்டி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!
இந்நிலையில், கோபி நயினார், திராவிடர் கழகம் வழங்கிய தந்தை பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்து தனது எக்ஸ்தளப்பதிவில் பகிர்ந்திருந்தார். திராவிடர் கழகம், திமுக மீது பல குற்றச்சாட்டுக்களை அடுங்கி இருந்த அவர், ''பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போராட்ட உணர்வோடு தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன். தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது.
இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது. தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம். இந்தியா முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும், எதிர்காலத்தில் எனக்கும் நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை'' எனத் தெரிவித்து இருந்தார்.
தான் ''எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம்'' என அவர் கூறியுள்ளது விருதை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்ததைவிட, அதிர்ச்சியான பல விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
சமூக விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வந்த கோபி நயினார் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சுற்றுச்சூழல் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார். காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கூட பழவேற்காடு பகுதியில் குவாரிக்காக நிலத்தை தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமாக போராடினார். இதற்கிடையே அவர் அளித்த பேட்டி ஒன்றில், "திமுக அரசு மீதும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். மக்களுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் மீது திமுக அரசு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் விமர்சித்து இருந்தார்.
கோபி நயினார் பேசியதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதாவது குறிப்பிட்ட ஒரு கட்சியை பற்றி கோபி நயினார் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறி ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆளும் அரசுக்கு எதிராக பேசியதாலயே கோபி நயினார் குறிவைக்கப்படுவதாக அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கோபி நயினாரைச் சுற்றி என்னதான் நடக்கிறது என விசாரித்தோம்.'' அவரது சொந்த ஊரான காட்டூர் ஏரி 362 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தின் சாலை அமைக்கும் பணிகளுக்காக இந்த ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் முயற்சிகள் நடைபெற்றது. அதற்கு ஊராட்சிமன்றத் தலைவர், முதல் காட்டூர் காவல்துறையினர் அரசு அதிகாரிகள் என அனைவரும் உடந்தையாக செயல்படுவதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தார் கோபி நயினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பின்புலம், திரைத்துறை பிரபலம், சாதிய ஆதரவு என அடுத்தடுத்து எங்கு எந்த வேலை நடந்தாலும் அங்கு சென்று போராடுவது, எதிர்ப்புத் தெரிவித்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என தொடர்ச்சியாக அதிரடி காட்டி வந்தார்.
காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிர்ப்பு, பழவேற்காடு பகுதியில் குவாரிக்காக நிலத்தை தோண்டுவதற்கு எதிர்ப்பு, கும்மிடிப்பூண்டி அருகே கிராவல் மண் குவாரிக்கு எதிர்ப்பு என அரசு அனுமதி வழங்கிய வேலைகளையும் தடுத்து நிறுத்துவது, அவர்களிடம் அந்தப்பகுதி இளைஞர்களை சேர்த்துக் கொண்டு முறைப்படி டெண்டர் எடுத்தவர்களை மிரட்டுவது என விவகாரங்களில் அதிகம் தலையிடத் தொடங்கினார்.
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் அடுத்த கரடிபுத்தூர் கிராமத்தில் கள்ளாங்குத்து வகையை சேர்ந்த ஐந்து ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில், சென்னை உள்வட்ட சாலைப்பணிக்காக தனியார் கிராவல் மண் குவாரி செயல்பட சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களை(?) திரட்டி கிராவல் மண் குவாரியை முற்றுகையிட்டு, பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைப்பிடித்து எதிர்ப்புத் தெரிவித்தார் கோபி நயினார். இதனால், அவர் உட்பட பலரின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படித் தொடர்ச்சியாக அவர் ஆட்களைத் திரட்டி மீஞ்சூர் பகுதிகளில் சமூக ஆர்வலர் என்கிற போர்வையில் எதிர்ப்பது, போராடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என அல்லை மீறிச் சென்றார். இதனால், முறையாக டெண்டர் எடுத்தவர்களும் பாதிக்கப்பட்டனர். இது அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கடும் சவாலாக இருந்து வருவதோடு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் முதல், செல்வாக்கான நபர்கள் வரை அனைவரிடமும் கோபி நயினாருக்கு பகைமையை ஏற்படுத்தியது.
நியாயமான பிரச்னைகளில் போராட முயன்றால் அவரை பாராட்டலாம். அவரது போக்கை பிடிக்காத விசிக தலைமையே கோபி நயினாரின் செயல்பாடுகளால் அவரை ஒதுக்கி வைத்தது. இந்நிலையில்தான் விருதை திருப்பி அளிப்பதாகக் கூறியதோடு மட்டுமல்லாமல், தான் இவர்களால் கொல்லப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். தனக்கான அனுதாபம் தேடிக் கொள்வதோடு, தன்னை தலித் சமூக போராளியாகவும் கட்டிக் காக்கும் எண்ணத்தில்தான் அவர் தான் கொல்லப்படலாம் எனக் கூறி தன் தவறுகளை மறைக்கப் பார்க்கிறார்'' என்கிறார்கள்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்ட சண்முகம்.. பரணி செய்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!