×
 

சாமுண்டீஸ்வரி சொன்ன வாரத்தை.. ஏமாற்றத்தில் பரமேஸ்வரி பாட்டி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் மீண்டும் வந்து தன்னுடைய பேரனுமாக பரமேஸ்வரி பாட்டி பேசிய நிலையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி சாமுண்டீஸ்வரியிடம் என்னாச்சு என்று கேட்க அவள் தான் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ராஜேஸ்வரி என்ன சொல்ற.. அந்த கேடு கெட்டவனையா உன் பொண்ணுக்கு கட்டி வைக்க போற என்று கேட்க சாமுண்டீஸ்வரி இல்ல ட்ரைவர் ராஜா தான் என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட போறான் என்று சொல்கிறாள். 

இதனை தொடர்ந்து மறுபக்கம் பரமேஸ்வரி நான் போய் சாமுண்டீஸ்வரியிடம் பேசுறேன், அவளை சம்மதிக்க வைக்கிறேன் என்று கிளம்பி வருகிறாள். பாட்டி ரேவதிக்கு என் பேரனை கட்டி வைக்க சம்மதம் சொல்லு என்று பேச சாமுண்டீஸ்வரி கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். 

இதையும் படிங்க: தெரியவந்த உண்மை; கடும் கோபத்தில் ரேவதி, காத்திருக்கும் ட்விஸ்ட் என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

மேலும் நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது என்று சொல்லி கிளம்பி செல்கிறாள், பரமேஸ்வரி பாட்டியும் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். 

அதனை தொடர்ந்து ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் வந்து அவனையா நம்ப பொண்ணுக்கு கட்டி வைக்க போற? அவன் நல்லவன் இல்ல என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அவன் கேடு கெட்டவன் என்பது எனக்கும் தெரியம் என்று சொல்கிறாள். 

அப்படி தெரிந்தே நம்ம பொண்ணு வாழ்க்கையை நான் கெடுப்பேனா? கண்டிப்பா அவன் கூட இந்த கல்யாணம் நடக்காது. ட்ரைவர் ராஜாவை தான் நம்ப வீட்டு மாப்பிள்ளையாக்க போறேன் என்று சொல்ல ராஜராஜன் நாம நினைத்த மாதிரியே எல்லாம் நடக்குது என சந்தோசப்படுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: குடோனுக்குள் அடைக்கப்படும் சாமுண்டேஸ்வரி.. கல்யாணத்தை நிறுத்திய ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share